தொகுப்பாளினியும், நடிகர் சாந்தனுவின் மனைவிமான கிகி விஜய் சொந்தமாக டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் திரை உலகில் க்யூட் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சாந்தனு மற்றும் கிகி விஜய். இதில் சாந்தனு தனது தந்தையைப் போலவே தானும் நடிகராக வேண்டும் என்ற ஆர்வத்தில் ‘வேட்டிய மடிச்சு கட்டு’ என்கிற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன் பின்னர் ‘சக்கரகட்டி’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் போதிலும் இவருக்கு சரியான படம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ‘சக்கரகட்டி’ படத்திற்கு பின்னர் ‘சித்து பிளஸ் 2’, ‘அம்மாவின் கைபேசி’, ‘முப்பரிமாணம்’, ‘பாவக்கதைகள்’ போன்ற பல படங்களில் நடித்தார்.
இதில் ‘பாவக் கதைகள்’ படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. தொடர்ந்து ‘முருங்கைக்காய் சிப்ஸ்’, ‘ராவணக் கோட்டம்’, ‘நீலநட்சத்திரம்’, ‘மாஸ்டர்’, ப்ளூ ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
இது மட்டுமில்லாமல் ‘MY3’ போன்ற சில வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கும் தொகுப்பாளினியாக இருந்த கிகி விஜய் என்பவருக்கும் 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் தமிழ் திரையுலகில் க்யூட் தம்பதிகளாக வலம் வருகின்றனர்.
இந்த நிலையில் கிகி இன்று சொந்தமாக டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு திரைபிரபலங்கள் பலர் வருகை தந்துள்ளனர்.
அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பலரும் கிகியின் புது தொழிலுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.