விமான நிலையத்தை தூக்கி சாப்பிட்ட ‘கிளாம்பாக்கம்’ பேருந்து நிலையம்.! சுத்தி பாக்கலாம் வாங்க.!

வெளியிட்டது

சென்னை மாநகரின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் முதல் முயற்சியாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் என்று அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த பேருந்து நிலையம் எப்படி இருக்கிறது? என்பதை விளக்கி தற்போது வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. பல சிறப்பு அம்சங்களுடன் 88 ஏக்கரில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை தூக்கி சாப்பிட்ட 'கிளாம்பாக்கம்' பேருந்து நிலையம்.! சுத்தி பாக்கலாம் வாங்க.! 1

 

தொடர் விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பிற ஊர்களுக்கு புறப்படும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதியை தாண்டுவதற்கே ஆறு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பேருந்திலேயே 15 மணி நேரம் பயணிக்க வேண்டிய அவலம் இருந்தது.


இதை களைவதற்காக தற்போது தாம்பரத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. தென் மாவட்ட மக்களின் சுமையை குறைக்கும் வகையில் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 88 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 15 நடை மேடைகள், 24 மணி நேர குடிநீர் வசதி, 500க்கும் அதிகமான கழிவறை வசதி, பார்க்கிங் வசதி என்று பல அம்சங்களுடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த பேருந்து நிலையத்தின் சிறப்பு அம்சங்களை விளக்கி சன் நியூஸ் தொலைக்காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. விமான நிலையத்திற்கு நிகரான போக்குவரத்து அம்சங்களுடன் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.


தாய்மார்கள் பாலூட்டுவதற்காக 5 ஏசி அறைகள், பேருந்தில் பயணிப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கும் வகையில் காவேரி மருத்துவமனை சார்பாக சிறப்பு மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் வசதிகள், இலவசமான பரிசோதனைகள் மற்றும் மருந்தகங்கள், நகரும் படிக்கட்டுகள், உணவகங்கள், ஹோட்டல்கள், நடக்க முடியாதவர்களுக்கு இலவசமாக பேட்டரி கார்கள்.

ஆண்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கு உதவிடும் வகையில் ஆங்காங்கே சார்ஜிங் ஸ்டேஷன், திருநங்கைகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித்தனி கழிவறைகள், பயணிகள் முன்னரே பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டால் அவர்கள் தங்குவதற்கு ஏதுவாக டார்மெட்ரி என்று அழைக்கப்படும் ஓய்வறைகள்.


நடத்துனர்கள், ஓட்டுநர்கள் ஓய்வு எடுக்க விரும்பினால் அவர்களுக்கு என தனி ஓய்வறைகள், பேருந்து நிலையம் முழுவதையுமே பணியாளர்கள் இல்லாமல் மெஷினை வைத்து சுத்தப்படுத்தும் வகையில் அதிநவீன மிஷின்கள், இருக்கைகளுடன் கூடிய 14 நடைமேடைகள்

12 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்கள், 500 கழிவறைகள், இரண்டு அடுக்குகளில் 2000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகளுடன் கூடிய பார்க்கிங் இடங்கள் மற்றும் சுற்றுலாவிற்கு வந்தது போல உணரும் வகையில் பேருந்து நிலையத்தைச் சுற்றி பூங்காக்கள் என மொத்தம் 400 கோடிக்கு இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.


திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை போன்ற தென்மாவட்ட மக்கள் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நகரின் மையப் பகுதியில் இருந்த கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருக்கும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சரியான பேருந்து வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் கிளாம்பாக்கத்திற்கு புறநகர் ரயில் நிலையமும் இல்லாதது பெரும் குறையாக கருதப்படுகிறது. ரயிலில் வருபவர்கள் வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களில் இறங்கி கிளாம்பக்கத்திற்கு மீண்டும் பேருந்தில் வரவேண்டும் என்பதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

விரைவில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் குறைகளை கேட்டு அது அவை களையப்பட்டு விரைவில் சென்னையின் புது அடையாளமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Sun News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்