புது சீரியலுக்கு நாள் குறித்த விஜய் டிவி.! முடிவுக்கு வரும் மெகா ஹிட் சீரியல்.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியலுக்காக தற்போது டிஆர்பி யில் குறைவான புள்ளிகளை பெற்ற தொடரை அதிரடியாக நிறுத்துகிறது விஜய் தொலைக்காட்சி. இது குறித்த புது ப்ரோமோவை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சியாக விஜய் டிவி விளங்கி வருகிறது. இதனால் இந்த தொலைக்காட்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த நிலையில் ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா நிறுவனம் தயாரித்து வரும் கிழக்கு வாசல் சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது விஜய் டிவி. கடந்த ஆண்டு நிறைவடைந்த பாரதி கண்ணம்மா சீரியலின் பாகம் 2 தற்போது நடந்து வரும் நிலையில் அதை முடித்துவிட்டு தற்போது புது சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புது சீரியலுக்கு நாள் குறித்த விஜய் டிவி.! முடிவுக்கு வரும் மெகா ஹிட் சீரியல்.! ப்ரோமோ இதோ.! 1

பாரதி கண்ணம்மா சீசன் 1 தொடர் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. இந்த சீரியல் முடிவடைந்த ஒரு வாரத்திலேயே இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. ஆனால் முதல் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை. டிஆர்பியில் படுமோசமாக அடி வாங்கிய இந்த நிகழ்ச்சியை 9 மணியிலிருந்து பத்து மணிக்கு மாற்றியிருந்தனர். தற்போது கதைப்படி பாரதியும் கண்ணம்மாவும் திருமணம் செய்திருக்கும் நிலையில் தொடர் சூடு பிடித்திருக்கிறது. ஆனால் திடீரென இந்த தொடரை நிறுத்திவிட்டு புதிய தொடரை ஒளிபரப்ப விஜய் டிவி தயாராகி இருக்கிறது. விஜயின் தந்தை எஸ் ஏ சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜீ தமிழ் புகழ் ரேஷ்மா முரளிதரன் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

இந்தத் தொடர் வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக புதிய ப்ரோமோ ஒன்றை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. எனவே பத்து மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருவதாக தெரிகிறது. ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா நிறுவனம் இந்த தொடரை தயாரிக்க ஜீ தமிழ் தொலைக்காட்சி புகழ் ரேஷ்மா முரளிதரன் கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வெங்கட் ரங்கநாதன் நடிக்கிறார் மேலும் ஜானகி சுரேஷ், அஸ்வினி, சிந்து ஷாம் என பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். பாரதி கண்ணம்மா சீசன் 2 முடிவடைய இருப்பது அந்த ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்