விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமாகும் கிழக்கு வாசல் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த நாடகத்தை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார் .இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ராடான் மீடியா ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கி, இந்த நிறுவனம் மூலமாக சின்னத்திரையில் பல நாடகங்களை தயாரித்திருக்கிறார். தற்போது சன் தொலைக்காட்சியில் இருந்தது விலகி விஜய் தொலைக்காட்சிக்கு வந்த அவர், தற்போது கிழக்கு வாசல் என்கிற புது சீரியலை தயாரித்து இருக்கிறார். இந்த சீரியலில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது அந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் முதலில் மெட்டி ஒலி சீரியலில் நடித்த சஞ்சீவ் ஹீரோவாக நடித்த ஒப்பந்தமானார். பின்னர் சில தனிப்பட்ட காரணங்களால் சீரியல் தொடங்குவதற்கு முன்பே இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார் சஞ்சீவ். அவருக்கு பின்பு தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். மேலும் இந்த சீரியலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்து வந்த நடிகை ரேஷ்மா முரளிதரன், ரட்சிதாவின் கணவர் நடிகர் தினேஷ், பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர். இந்த நாடகம் “சம்சாரம் அது மின்சாரம்” என்ற விசுவின் கதையை மறு உருவாக்கம் செய்யப்பட்டு சீரியலாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது வளர்ப்பு மகளாக ரேஷ்மா முரளிதரன் நடிக்க இருக்கிறார். நாடகம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு எடுக்கப்பட்ட நிலையில் தற்போது நாடகத்தின் முதல் ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
இந்த ப்ரோமோவில் எஸ்ஏ சந்திரசேகருக்கும் அவரது மனைவிக்கும் சஷ்டியப்த பூர்த்தி நடக்கிறது. அப்போது ரேஷ்மாவை பாத பூஜை செய்ய அழைக்கின்றனர். ஆனால் ரேஷ்மா பெத்த பிள்ளை இல்லை என்று ஆனந்த் பாபு அசிங்கப்படுத்துகிறார். தத்து எடுத்த பிள்ளைக்கு எல்லா உரிமையும் கொடுத்தால் பின்னர் சொத்திலும் பங்கு கேட்பார், இவர் இந்த வீட்டு பொண்ணு இல்லை, பொண்ணு மாதிரி என அசிங்கப்படுத்துகிறார். அப்போது எழும் சந்திரசேகர், அவ பொண்ணு இல்ல சாமி என்று வசனம் பேசுகிறார். உணர்வுப்பூர்வமான அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television