தமிழ் திரைப்படங்களை தனது கிண்டலும் கேலியுமான விமர்சனங்களால் எப்பொழுதும் கடுமையாக விமர்சித்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். இவர் தற்போது விஜய் ஆண்டனி நடித்திருக்கும் கொலை படம் பற்றி அது போன்ற காட்டமான ஒரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அவர் கூறியதாவது, இந்த படத்தை பொருத்தவரை ஆரம்பத்தில் ஒரு பாடகியை காட்டுகிறார்கள். பின்னர் அவர் பெரிய மாடலாகிறார். இதன் பின்னர் அவர் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அந்த வழக்கு விசாரணை போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரித்திகா சிங்கிடம் வருகிறது. அப்போது உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவர், விநாயக்கின் உதவியுடன் இந்த கேஸை முடிக்குமாறு உத்தரவிடுகிறார். அப்போது தான் ஹீரோ விநாயகத்தை காட்டுகிறார்கள். அவர்தான் விஜய் ஆண்டனி. அவரைப் பார்த்தவுடன் தியேட்டரே குபீரெனை சிரித்து விட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இரண்டு கண்ணை கொண்டு பார்க்க முடியவில்லை, சரி சும்மா தானே உட்கார்ந்திருக்க போறோம் என்று சொல்லி இந்த படத்தை டி கோட் பண்ண ஆரம்பித்தோம். அப்போது பார்த்தால் இது இயக்குனரின் உலகம் இல்லாமல், ப்ரொடியூசரின் உலகமாக இருக்கிறது. படம் முழுக்க முழுக்க இங்கிலீஷ் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பீட்டர் விடுபவனை உள்ளே இறக்கிவிட்டார்கள் போல..! ஆங்காங்கே தமிழ் வருகிறது, அந்த தமிழ் வார்த்தைகளை எடுத்துவிட்டு சைனீஸ் வார்த்தைகளை போட்டால் இது ஒரு சீன படம். உருது வார்த்தைகளை போட்டால் இது ஒரு உருது படம். தமிழ் திரையுலகில் இருக்கும் ஒட்டுமொத்த நடிகர்களும் வியர்க்கவே கூடாது என்று நினைக்கிறார்கள் எல்லாம் ஒர்க் ஃப்ரம் ஹோமிலிருந்து வேலை பார்ப்பது போல கிரீன் மேட்டிலேயே நடித்திருக்கிறார் இந்த ஹீரோ. உயிரை வாங்காதீங்க டா படத்தை முடிங்கடா என்று சொல்லும் அளவிற்கு படம் இருந்தது.
அந்தப் பெண்ணின் இறப்பு பற்றி விசாரிக்க ஆரம்பிக்கும் பொழுது அந்த அறையில் அந்த பெண்ணுடன் ஒருவர் இறந்தார் என்று சொல்கிறார். பின்னர் இருவர் இருந்தார் என்று சொல்கிறார், பின்னர் மூன்று பேர் என்று சொல்கிறார். அவர் விசாரணை செய்ததை பார்க்கும் பொழுது அந்த அம்மா செத்தது தான் செத்து விட்டது இருக்கிற எங்களை கொன்று விடாதிங்கடா படத்தை சீக்கிரம் முடிங்கடா என்று சொல்வது போல் ஆகிவிட்டது. விஜய் ஆண்டனி வழக்கமாகவே மொக்கை படங்களில் தான் நடிப்பார். இந்தப் படமாவது நல்லா இருக்காதா என்று நம்பி போனதற்கு அவர்கள் செய்தது கொலை, நான் சொன்னதையும் மீறி இந்த படத்தை பார்க்க போனீர்கள் என்றால் நீங்கள் செய்யப் போவது தற்கொலை என்று தனது விமர்சனத்தை முடித்தார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tamil Talkies