மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வரும் KPY பாலா தற்போது அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமான பாலா, மக்களுக்கு சேவை செய்து மக்களுக்கு பிடித்த ஒரு நடிகராகவும் மாறி போயிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா, தொடர்ந்து மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்குவது, முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்குவது, குடிநீர் சுத்திகரிப்பான் வழங்குவது என்று தொடர்ந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாகவே பாலா சின்னத் திரையில் வேலைப் பார்த்து வந்தபோது, தன்னுடைய சொந்த செலவில் 30 மாணவர்களை படிக்க வைத்தார். மேலும் சில முதியவர்களை வைத்து இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார். ஆனால் இதை அவர் பப்ளிசிட்டிக்காக செய்யவில்லை. ஒரு மேடையில் அவரைப் பற்றிய காணொளியில் இந்த உண்மைகளை கூறிய பின்னர் தான், அவர் இவ்வாறு செய்து வருவதே பலருக்கும் தெரிய வந்தது. இந்த நிலையில் பாலா தற்போது தொடர்ந்து உதவிகளை செய்து வரும் நிலையில் நெட்டின்சன்கள் அவரை கலாய்த்து போஸ்ட் போட்டு வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் இப்படியே போனால் நீ பிச்சை தான் எடுப்பாய் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதைப் பார்த்த பாலா தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர், “என்ன நல்லது செய்தாலும் சமூக வலைதளத்தில் உனக்கு பின்னால் யார் செயல்படுகிறார்கள்? என்கிற கேள்வியை கேட்கிறார்கள். எனக்கு பின்னால் இருப்பது அவமானமும், கஷ்டமும் தான். சிலர் நீ சிக்னலில் பிச்சை எடுக்கப் போகிறாய் என்றெல்லாம் கமெண்ட் செய்கிறார்கள். நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறேனோ அப்போது இந்த ஆம்புலன்ஸ் வரும். அதுதான் எனக்கு சந்தோசம் என்னால் முடிந்தவரை கொடுத்துக் கொண்டே இருப்பேன். எதிர்காலம் என்னை காப்பாற்றும்” என்று பேசினார். அவரின் இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tamil Mithran