மகளின் மருத்துவ செலவுக்காக உதவி கேட்டு அழைத்த தாய்.! பாலா செய்த நெகிழ்ச்சி செயல்.! வீடியோ இதோ

வெளியிட்டது

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு புகழ்பெற்ற பாலா பலருக்கும் தொடர்ந்து உதவி செய்து வந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே மூன்று ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த நிலையில் தற்போது அவர் செய்த உதவி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அனைவரும் திரைத் துறையில் சம்பாதித்த உடனேயே சொந்தமாக கார், வீடு என்று வாங்கி வரும் நிலையில் பாலா சற்று விதிவிலக்காக இருக்கிறார். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயணித்து வரும் அவர் முதியவர்கள், ஆதரவற்றவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல அறந்தாங்கியில் இருக்கும் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியிருந்தார். அப்போது பலரும் பாலாவை பாராட்டி வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகளின் மருத்துவ செலவுக்காக உதவி கேட்டு அழைத்த தாய்.! பாலா செய்த நெகிழ்ச்சி செயல்.! வீடியோ இதோ 1
அண்மையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமப் பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் இல்லாத சூழ்நிலை இருப்பதை அறிந்து கொண்ட பாலா, அந்த கிராமத்திற்கும் ஆம்புலன்ஸை வழங்கி இருந்தார். இது பலரின் பாராட்டுகளை பெற்றது. இதன் மூலமாக சில உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் பாலா வீடியோ வெளியிட்டு இருந்தார். இது மட்டுமில்லாமல் 30 மாணவர்களை தனது சொந்த செலவில் படித்து வைக்க வருகிறார். மேலும் ஆதரவற்றவர்களுக்காக ஒரு முதியோர் இல்லமும் நடத்தி வருகிறார். சத்தம் இல்லாமல் பாலா செய்து வரும் இந்த உதவிகள் பாராட்டுகளை பெற்று வந்த நிலையில், ஒரு தாய் தனது மகளின் சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது அதை உங்கள் பக்கத்தில் பகிர முடியுமா என்று கேட்டுள்ளார்.


பாலாவின் பக்கத்தில் பகிர்ந்தால் தனக்கு உதவிகள் வரும் என்று கேட்டு இருக்கிறார் அந்த தாய். அதை பார்த்த பாலா தானே உதவுவதாக சொல்லி அந்தப் பெண்ணின் பிசியோதெரபிக்கு ஆகும் செலவையும் தானே ஏற்றுக் கொண்டு, மேலும் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணின் தந்தையின் தொலைபேசி எண்ணையும் பகிர்ந்து உதவுமாறு கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பாலாவின் இந்த செயலை வாழ்த்தி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்