கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு வந்த பாக்கியலெட்சுமி ரித்திகா, வினுஷா தேவி, மற்றும் முத்தழகு சீரியல் நடிகை ஷோபனாவை தற்போது பாலா பங்கமாக கலாய்த்து இருக்கிறார். ரித்திகாவை தன்னுடைய முன்னாள் க்ரஷ் என்று கூறியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. காமெடி கவுண்ட்டர் காமெடிகளுக்கு பெயர் போன நடிகராக சின்ன திரையில் விளங்கிக் கொண்டிருப்பவர் பாலா. இவர் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு பின்னர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக தற்போது திரைத்துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கவுண்ட்டர் காமெடிகளுக்கு பெயர் போன நபராக இருக்கிறார் பாலா. தற்போது பாலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். அவர் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சி சற்று வித்தியாசமானது. கலக்கப்போவது யாரு முந்தைய சீசன்களில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் பலரையும் வைத்து தற்போது இந்த சீசன் எடுக்கப்பட்டு வருகிறது. முந்தைய போட்டுயாளர்கள் பலரும் தற்போது காமெடி செய்து வருகின்றனர். இந்த சீசனில் நடுவர்களாக மதுரை முத்து, சுருதிஹா, ரேஷ்மா மற்றும் தாடி பாலாஜி ஆகியோர் இருக்கின்றனர். இந்த சீசனை பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அடிக்கடி சிறப்பு விருந்தினர்கள் யாரையாவது அழைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் கூட பாக்யராஜ் மற்றும் திண்டுக்கல் லியோனி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். இந்த நிலையில் இந்த வார சிறப்பு விருந்தினர்களாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி, முத்தழகு சீரியல் நடிகை ஷோபனா ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
இதில் ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது பாலாவுக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது என்றும், இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் ஒரு வதந்தியை கிளப்பி இருந்தனர். ஆனால் ரித்திகா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். தற்போது மீண்டும் இருவரும் சந்தித்துக் கொண்ட போது அறந்தாங்கி நிஷா பாலாவிடம் இதுகுறித்து கேட்க, அவர் ரித்திகா என்னுடைய பழைய க்ரஷ் முத்தழகு சீரியல் நடிகை ஷோபனா என்னுடைய புது க்ரஷ், வினுஷா தேவி என்னுடைய லேடி கெட்டப் என்று பங்கமாக கலாய்த்து இருக்கிறார். அதைக் கேட்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television