கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு வந்த தேங்காய் சீனிவாசன் கெட்டப் போட்டு வந்த யோகியை தற்போது ஸ்ருதிகா மரணமாக கலாய்த்திருக்கும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தேங்காய் சீனிவாசன் பேத்தி தான் ஸ்ருதிகா. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பிரபலமாகி இருக்கிறார். தற்போது இவர் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் நடுவராகவும் வந்திருக்கிறார். இங்கு வந்து லூட்டி அடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹா தற்போது தனது தாத்தா தேங்காய் சீனிவாசன் போல கெட்டப் போட்டு வந்தவரை மரணமாக கலாய்த்திருக்கும் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பல நல்ல கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது. விஜய் டிவியில் பங்கு பெரும் கலைஞர்கள் வெள்ளித் திரையில் தற்போது பிரபலங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு சாட்சியாக சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றவர்களை கூறலாம். இவர்கள் வெள்ளித்திரையிம் கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மட்டுமில்லாமல் பல நகைச்சுவை கலைஞர்களை இந்த டிவி உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி ஆக வந்த பலர் இன்று பெரிய அளவிற்கு உயர்ந்திருக்கின்றனர். குறிப்பாக சிங்கப்பூர் தீபன், அமுதவாணன், நாஞ்சில் விஜயன், தங்கதுரை, பாலா, புகழ், ராமர் என பல கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய கலைஞர்களாக உருவாகி இருக்கின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை முடித்து நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனின் நடுவர்களாக தாடி பாலாஜி, மதுரை முத்து, ஸ்ருதிஹா, பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் இருக்கின்றனர். கே பி ஒய் பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ராமராஜன் தனது சாமானியன் படத்தின் ப்ரோமோஷனுக்காக வந்திருந்தார். தற்போது நக்கீரன் கோபால் மற்றும் ராதாரவி ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர்.
இதில் காமெடி நடிகர் யோகி ஸ்ருதிஹாவின் தாத்தா தேங்காய் ஸ்ரீனிவாசன் போல கெட்டப் போட்டு வந்திருக்கிறார். அவரை ஸ்ருதிகா தாத்தா நான் உங்களை நேரில் பார்த்ததே இல்லை, போட்டோவில் தான் பார்த்திருக்கிறேன். எங்கள் பாட்டி சொல்லுவார்கள் நீங்கள் கோமணம் கட்டிக்கொண்டு உடம்பில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு பால்கனியில் உட்கார்ந்து மசால் வடை சாப்பிடுவீர்கள் என்று சொல்லி மரணமாக கலாய்த்து இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television