அடுத்தடுத்து கர்ப்பமான மருமகள்கள்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை பங்கம் செய்த KPY சாம்பியன்ஸ்.!

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை மரணமாக கலாய்த்து தற்போது கே பி ஒய் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் Spoof செய்து இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவை பார்த்த பலரும் உங்கள் தொலைக்காட்சியை தொடரை நீங்களே எப்படி கலாய்க்கலாம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்தத் தொடரில் வீடு வாசல் அனைத்தையும் இழந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர். தனித்தனியே அறைகள் இல்லாத நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மருமகள்கள் அடுத்தடுத்து கர்ப்பம் ஆகி வருவது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கதைக்களத்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மிகவும் கேளிக்கு உள்ளாகியிருந்தது. இதனால் தற்போது கதையை வேறு விதமாக மாற்றி இருக்கிறார் இயக்குனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து கர்ப்பமான மருமகள்கள்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை பங்கம் செய்த KPY சாம்பியன்ஸ்.! 1
தற்போது கதைப்படி ஜீவாவிற்கு தொடர்ந்து அண்ணன் தம்பிகளால் அவமானம் ஏற்படுகிறது. ஜீவா மனைவி மீனாவின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த திருமணத்திற்கு அண்ணன் தம்பிகள் அனைவரும் சேர்ந்து மொய் வைப்போம் என்று ஜீவா மீனாவிடம் கூறிக் கொண்டிருக்க, ஆனால் அனைவரும் தனித்தனியாக மொய் வைக்க கிளம்புகின்றனர். இதனால் இந்த வாரம் மிகப்பெரிய சண்டை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படித்து முடித்து சரியான வேலைக்கு செல்லாமல் தனது அண்ணனுடன் இணைந்து இத்தனை ஆண்டுகளாக கடையை கவனித்து வந்த ஜீவாவிற்கு என்று தனி சம்பளமோ பணமோ கொடுப்பது கிடையாது. அவர் அனைத்து தேவைக்கும் அண்ணனை நம்பியே இருக்கிறார். இதனால் தனது மனைவிக்கோ பிள்ளைக்கோ கூட எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதன் காரணமாக ஜீவா கொஞ்சம் கொஞ்சமாக மாமனார் பக்கம் சாய்ந்து விடுவார் போல தெரிகிறது.


கதைக்களம் இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை கலாய்த்து அப்படியே நடித்துக் காட்டி இருக்கின்றனர் போட்டியாளர்கள். அந்த வீடியோ தற்போத்து வேகமாக பரவி வருகிறது. உங்கள் தொலைக்காட்சியில் வரும் தொடர்களை நீங்களே எப்படி கலாய்த்தால் நாங்கள் எங்கே செல்வது என்று ரசிகர்கள் காமெடியாக பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்