படுத்து கிடந்த எங்க தாத்தாவோட முருங்கைக்காய் வியாபாரம் உங்கனால தான் எழுந்துச்சு.! பங்கம் செய்த பாலா.!

வெளியிட்டது

கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்த பாக்யராஜை ஸ்ருதிகாவும் பாலாவும் சேர்ந்து கலாய்த்து இருக்கின்றனர். அவர்களுக்கு இணையாக பாக்யராஜும் அவர்களை கலாய்த்து இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். பல நல்ல கலைஞர்களை உருவாக்கி இருக்கும் விஜய் டிவி, பல லட்சம் ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. ஆரம்பத்தில் நாடகங்கள் குறைவாகவும் ரியாலிட்டி ஷோக்களை மட்டுமே வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த டிவி, தற்போது பல நெடுந் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த தொடர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. விஜய் டிவியிலிருந்து தற்போது சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் வெள்ளி திரையில் நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பலர் காமெடியிலும் கலக்கி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படுத்து கிடந்த எங்க தாத்தாவோட முருங்கைக்காய் வியாபாரம் உங்கனால தான் எழுந்துச்சு.! பங்கம் செய்த பாலா.! 1

இதில் குறிப்பிட தகுந்த நிகழ்ச்சியாக இருப்பது கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சி மூலம் பல காமெடி கலைஞர்கள் உருவாகி இருக்கிறார்கள். குறிப்பாக புகழ், பாலா, சரத், குரேஷி, ராமர், தங்கதுரை, நாஞ்சில் விஜயன் போன்ற பல கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து உருவாகியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் படங்களிலும் நடித்திருக்கின்றனர். குறிப்பாக புகழ் அஜித் மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது அவர் ஹீரோவாக மிஸ்டர் ஜு என்கிற படத்திலும் நடித்து வருகிறார். பாலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படிப்பட்ட பல கலைஞர்களை உருவாக்கிய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் நடுவர்களாக ஸ்ருதிஹா, மதுரை முத்து, தாடி பாலாஜி, பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் இருக்கின்றனர்.


இந்த நிகழ்ச்சியை அறந்தாங்கி நிஷாவுடன் இணைந்து கே பி ஒய் பாலா தொகுத்து வழங்கி வருகிறார். வார வாரம் யாராவது ஒரு சிறப்பு விருந்தினர்களை அழைத்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் திண்டுக்கல் லியோனி மற்றும் பாக்யராஜை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இருக்கின்றனர். அங்கு வந்த பாக்கியராஜ் இடம் நீங்கள் முருங்கைக்காய் பற்றி பேசியதால்தான் எனது தாத்தா முருங்கைக்காய் விற்று பல மடங்கு லாபம் பார்த்தார் என்று பாலா அவரை கலாய்க்கிறார். பின்னர் ஸ்ருதிகா அவரைப் பார்த்து உங்களை முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறேன் ஒரு தடவை உங்களை சுற்றி பார்த்துக்கொள்ளவா என்று அவரை சுற்றி வருகிறார். அப்போது பாக்யராஜ் என் முன்னாடி பார்த்தால் பரவாயில்லை பின்னாடி போய் எதை பார்த்தாய் என்று காமெடியாக கலக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள் வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்