25 வருடம் நாங்கள் பட்ட கஷ்டம்.! பழைய வீடு, புது வீட்டை ஒப்பிட்டு KPY தீனா பகிர்ந்த புகைப்படம்..!

வெளியிட்டது

25 ஆண்டுகளுக்கு முன்பு தான் வாழ்ந்த வீட்டையும் தற்போது தான் கட்டி இருக்கும் புது வீட்டையும் ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் விஜய் டிவி பிரபலமாக இருக்கும் தீனா. தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பல கலைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் தீனா. இவர் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த கைதி படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

25 வருடம் நாங்கள் பட்ட கஷ்டம்.! பழைய வீடு, புது வீட்டை ஒப்பிட்டு KPY தீனா பகிர்ந்த புகைப்படம்..! 1

இருந்தபோதிலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் மொட்ட ராஜேந்திரன் போல சரத்தும் இவரும் இணைந்து செய்த காமெடிகள் மிகப் பிரபலமானது. குறுகிய காலத்திலேயே இவர்கள் இருவரும் மிகப் பிரபலமானவர்கள். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன்முறையாக தனுஷ் நடிப்பில் உருவாகி இருந்த பா பாண்டி படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார் தீனா.


பின்னர் 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா என்கிற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு வரவேற்பை பெற்றிருந்த போதிலும் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கின் நண்பராக லாரி ஓட்டுநராகவும் நடித்து அசத்தியிருந்தார் தீனா. இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்திலும் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.


KPY நிகழ்ச்சியில் வரும் நடுவர்கள் சிறப்பு விருந்தினர்களை போன் செய்து கலாய்ப்பதன் மூலமாக மிகப் பிரபலமாக மாறினார் தீனா. இவருடைய டைமிங் காமெடிகளுக்கும் கவுண்ட்டர் காமெடிகளைக் கண்டு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த நிலையில் அவர் தனது சொந்த ஊரில் வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றிருக்கிறது. வீடு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில் பால் காய்ச்சுவது போன்ற புகைப்படங்களை நேற்று பதிவிட்டு இருந்தார் தீனா.


புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே தீனாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்தது. ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து சினிமா வாய்ப்பு தேடி வந்த அவர், இன்று பெரிய வீடு ஒன்றை கட்டியிருப்பதை பார்த்து பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர். பலரும் தீனாவிற்கு வாழ்த்துகளை கூறி வந்தனர். குறிப்பாக விஜய் டிவி பிரபலங்களாக இருக்கும் பிரியங்கா தேஷ் பாண்டே, தமிழ் ரித்திகா, சுனிதா போன்ற பலரும் தீனாவிற்கு வாழ்த்துகளை கூறி வந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் இன்றைக்கு புது புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.


அதில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் தன்னுடைய குடும்பத்துடன் இருந்த புகைப்படத்தின் வீட்டையும் தற்போது தான் புதிதாக கட்டியிருக்கும் வீட்டின் புகைப்படத்தையும் பகிர்ந்து 25 வருட சவால் என்று பகிர்ந்திருக்கிறார். மேலும் வீடு என்பது தூண்கள் மற்றும் சுவர்களால் கட்டப்படுகிறது, ஆனால் இந்த வீடு காதல் மற்றும் கனவுகளுடன் கட்டப்பட்டது என்று வீட்டின் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். தீனாவின் பிரம்மாண்டமான வீட்டின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்