நீண்ட நாட்களுக்கு பிறந்த மகள்.! மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்த KPY நவீன்.!

வெளியிட்டது

‘கலக்கப்போவது’ யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நவீனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறந்த மகள்.! மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்த KPY நவீன்.! 1

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நவீன். காமெடி, உடல் மொழி, மற்றும் மிமிக்ரியில் அசத்தும் நவீனுக்கு ‘கலக்கப்போவது யாரு’ டைட்டில் கிடைக்கும் என்று எண்ணியிருந்த நிலையில் அவருக்கு அது கிடைக்காமல் போனது.

இருந்த போதிலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ‘பாவம் கணேசன்’ என்ற தொடரில் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தார் நவீன்.

நவீனுக்கு 2016ம் ஆண்டு திவ்யா லெட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தே வந்தனர். அதற்கு காரணம் நவீன் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருந்தார். இதை அறிந்த திவ்யலெட்சுமி நவீன் பற்றி போலீசில் புகார் கொடுத்தார்.

இதனால் சில காலம் சிறையில் இருந்த அவர் ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் கிருஷ்ணகுமாரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிருஷ்ண குமாரி, உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது, நீங்க சீக்கிரமே பிரிஞ்சிடுவீங்க என்று பலர் சாபம் விட்டனர்,


ஆனால் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார். பலரின் சாபத்தை பொய் என நிரூபித்த தனது மனைவிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தினார் நவீன்.

இதை பார்த்த நவீனும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். இந்த நிலையில் சமீபத்தில் நவீன் மற்றும் கிருஷ்ணகுமாரி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தனர்.

 

தற்போது வளர்ந்த தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்