உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது..கதறி அழுத மனைவி..சாபம் விட்டவர்கள் கண் முன்னால் மனைவிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய நவீன்

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நவீன். காமெடி, உடல் மொழி, மற்றும் மிமிக்ரியில் அசத்தும் நவீனுக்கு கலக்கப்போவது யாரு டைட்டில் கிடைக்கும் என்று எண்ணியிருந்த நிலையில் அவருக்கு அது கிடைக்காமல் போனது. இருந்த போதிலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பாவம் கணேசன் என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன். தற்போது நவீனின் மனைவி கிருஷ்ணகுமாரியின் வளைகாப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது..கதறி அழுத மனைவி..சாபம் விட்டவர்கள் கண் முன்னால் மனைவிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய நவீன் 1

நவீனுக்கு 2016ம் ஆண்டு திவ்யா லெட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தே வந்தனர். அதற்கு காரணம் நவீனுக்கு மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருந்தார் நவீன். இதை அறிந்த திவ்யலெட்சுமி நவீன் பற்றி போலீசில் புகார் கொடுத்தார். இதனால் சில காலம் சிறையில் இருந்த அவர் ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் கிருஷ்ணகுமாரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிருஷ்ண குமாரி, உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது, நீங்க சீக்கிரமே பிரிஞ்சிடுவீங்க என்று பலர் சாபம் விட்டனர், ஆனால் தான் கர்ப்கமாக இருக்கிறேன் என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார். இதை பார்த்த நவீனும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். Youtube Video Code Embed Credits: Little Talks

 

தற்போது சாபம் எல்லாம் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் கர்ப்பமான தனது மனைவிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தியுள்ளார் நவீன். இதில் விஜய் டிவியின் பல பிரபலங்கள் வாழ்த்தியுள்ளனர். நவீனின் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்