யோவ் உக்காருயா போய்.! சென்றாயனுக்கும் கே ராஜனுக்கும் மேடையில் நடந்த வாக்குவாதம்

வெளியிட்டது

தயாரிப்பாளர் கே ராஜனுக்கும் நடிகர் சென்றாயனுக்கும் மேடையிலேயே வைத்து சண்டை நிகழ்ந்துள்ளது. லோக்கல் சரக்கு என்ற படத்தில் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த கே ராஜன் சென்றாயனை மேடையிலேயே வைத்து அசிங்கப்படுத்தி இருக்கிறார். கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. தயாரிப்பாளரான கே ராஜன் எப்போதும் நடிகர்களையும் நடிகைகளையும் தொடர்ந்து விமர்சித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் எப்பொழுதும் நடிகர் காசு வாங்கிக்கொண்டு சுகமாக இருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக பேசி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் நடிகர்கள் கேரவனில் சுகமாக உட்கார்ந்து கொண்டு தயாரிப்பாளர்கள் தலையில் மிளகாய் அரைப்பதாகவும் பல இடங்களில் பேசி வருகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

யோவ் உக்காருயா போய்.! சென்றாயனுக்கும் கே ராஜனுக்கும் மேடையில் நடந்த வாக்குவாதம் 1

அதே போல் ஒரு கருத்தை தான் லோக்கல் சரக்கு இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிக் கொண்டிருந்தார். தயாரிப்பாளர்களுக்கு இங்கு மரியாதையே இல்லை, அதனால் தயாரிப்பாளர்கள் படங்களை எடுப்பதை நிறுத்தி விடுங்கள் என்று பேசிக் கொண்டிருந்தார். படம் எடுப்பது டார்ச்சர் என்று அவர் கூறிய போது, சென்றாயன் திடீரென எழுந்து சென்று ஏதோ பேச வந்தார். அப்போது சென்றாயனை பார்த்து நீ போய் உட்காரு, என்னைவிட அனுபவசாலியா நீ? என்று சென்றாயனை கே ராஜன் தடுத்தார். அதையும் மீறி சென்றாயன் தயாரிப்பாளர்கள் இருந்தால்தான் எங்களைப் போன்ற ஆட்களுக்கு வேலை கிடைக்கும். அதனால் நீங்கள் படம் எடுக்க வேண்டாம் என்று கூறாதீர்கள் என மைக்கை பிடித்து கூறினார்.

அப்போது சென்றாயனை பிடித்து தள்ளி, உனக்கு வேற வேலை வாங்கித் தருகிறோம், போய் உட்காரு, தயாரிப்பாளரை வேலையில்லாமல் ஆக்காதீர்கள் உட்காருயா என சென்றாயனை பார்த்து ஆவேசமாக கத்தினார் ராஜன். மேலும் எதிர்ப்பை தெரிவிக்க இங்கு வந்து விட்ட, நீங்கள் எல்லாம் எத்தனை பேரை காப்பாற்றி இருக்கிறீர்கள்? நாங்கள் எல்லாம் தயாரிப்பாளராக இருந்து மிகவும் கஷ்டப்பட்டவர்கள் ஒன்பது படங்களை எடுத்தவன் எனக்கு தெரியும். என்று அவர் தொடர்ந்து சென்றாயனை பார்த்து கத்தினார். இதனால் சென்றாயன் மிகவும் தலைகுனிந்து நடந்து சென்று அங்கு போய் அமர்ந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்