விரைவில் பிக் பாஸ் சீசன் 7 தொடங்க இருக்கும் நிலையில் யாரெல்லாம் போட்டியாளர்களாக லந்து கொள்ள இருக்கிறார்கள் என்கிற பரபரப்பு தற்போது எழுந்து வருகிறது. சமீபத்தில் வெளியான பிக்பாஸ் ப்ரோமோவில் இந்த முறை இரண்டு வீடுகள் மற்றும் 20 போட்டியாளர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எதற்காக இரண்டு வீடுகள்? இரண்டாவது வீட்டில் யார் இருக்கப் போகிறார்கள்? ஒரு வீட்டில் 10 பேர் மற்றொரு வீட்டில் 10 பேர் என இருக்கப் போகிறார்களா? என பலரும் யூகங்களை கிளப்பி வந்தனர். சமீபத்தில் துவங்கப்பட்ட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட ஒரு வீடு தான் இடம் பெற்றிருந்தது. இதனால் தமிழில் மட்டும் எதற்காக இரண்டு வீடுகள்? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது.

இந்த நிலையில் யாரெல்லாம் பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற பெயர்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கியது. அந்த வகையில் கோவையைச் சேர்ந்த சர்ச்சையான பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, நடிகை அப்பாஸ், குக் வித் கோமாளி பிரபலங்கள் சந்தோஷ் பிரதாப், தர்ஷா குப்தா, அம்மு அபிராமி, வி.ஜே ரக்ஷன், விஜய் டிவி நடிகையின் தொகுப்பாளரும் நடிகையுமான ஜாக்குலின், காக்கா முட்டை விக்னேஷ், பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர், நடிகர் ரட்சிதாவின் கணவர் தினேஷ், ரேகா நாயர், மாடல்கள் ரவிக்குமார் மற்றும் நிலா, பிரபல செய்தி வாசிப்பாளரான ரஞ்சித், நடிகர் பப்லு, சோனியா அகர்வால், விஜே பார்வதி என 18 பிரபலங்களின் பெயர்கள் முதற்கட்டமாக அடிபட்டு வருகின்றன. இதில் யாரெல்லாம் செல்ல போகிறார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில் குக் வித் கோமாளியில் கோமாளியாக கலக்கி வரும் குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமலின் பிக்பாஸ் போட்டோ முன்பு நின்று விரைவில் பிக்பாஸ் சீசன் 7 என பதிவிட்டிருக்கிறார். இதைப் பார்த்த குரேஷி ரசிகர்கள் பிக்பாஸிற்கு செல்வதை தான் இப்படி உறுதி செய்திருக்கிறாரோ? என்ற ரீதியில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அவர் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் புகைப்படத்தை மட்டும் பகிர்ந்து இருக்கிறார். இது ரசிகர்களை குழப்புவதற்காகவா அல்லது குரேஷி நிஜமாகவே பிக்பாஸில் கலந்து கொள்ள இருக்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.!