குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பரியங்கா இடையே வெடித்திருக்கும் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் மணிமேகலைக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் குரேஷி, இந்த நிகழ்வு குறித்து தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய அவர், மணிமேகலை தான் பிரச்னையை முதலில் தொடங்கியதாகவும், பிரியங்காவை பேசவிடாமல் முதலில் அமைதியாக இருக்க சொன்னது மணி தான் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மணிமேகலையை யாரும் மன்னிப்பு கேட்க சொல்லவில்லை எனவும், அவர் பொய் சொல்வது போல குரேஷி கூறியுள்ளார். மேலும் மணிமேகலை சண்டையிட்டு சென்றதால் நிகழ்ச்சி 2 மணி நேரம் நடக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும் பிரியங்கா மணிமேகலையை சந்தித்து பேசினால் , பிரியங்கா மிரட்டி உள்ளார் என கூட மணிமேகலை கூறலாம் என்பதால் அவர் சந்திக்கவில்லை என கூறியுள்ளார். குரைஷி ப்ரியங்காவுக்கு ஆதரவாக பேசியுள்ளது ரசிகர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது .