சுனாமிக்கு அப்புறம் இப்படி ஒரு அனுபவம்..! ரொம்ப பயமா இருக்கு.! நடிகை குஷ்பூ போட்ட பதிவு.!

வெளியிட்டது

குஷ்பூ தற்போது டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது நிலநடுக்கத்தை உணர்ந்ததால் நடுரோட்டிற்கு ஓடி வந்திருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழகத்தில் நடிகைக்கு கோவில் கட்டி கும்பிடும் அளவிற்கு ஒரு நடிகை இருக்கிறார் என்று சொன்னால் அது குஷ்பூ தான். 90களில் தொடங்கி இன்று வரை பல படங்களில் நடித்திருக்கும் குஷ்பூ, தற்போது நடிப்பது, படங்களை தயாரிப்பது, அரசியல்வாதி என்று பன்முக திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் அவருக்கு சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி உயர்வு கிடைத்தது. பொறுப்பேற்ற நாளே பணிகளை தொடங்கி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் குஷ்பூ. இந்த நிலையில் தற்போது அடிக்கடி டெல்லி சென்று வரும் அவர், அங்கு தங்கியிருக்கிறார். இந்த நிலையில் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தான் உணர்ந்ததாக ட்விட்டரில் குஷ்பு பதிவிட்டு இருக்கிறார்.

சுனாமிக்கு அப்புறம் இப்படி ஒரு அனுபவம்..! ரொம்ப பயமா இருக்கு.! நடிகை குஷ்பூ போட்ட பதிவு.! 1
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில் டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த போது நாங்கள் அனைவரும் தெருகளுக்கு ஓடி வந்து விட்டோம். டெல்லி முழுவதும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமிக்கு பிறகு இந்த நிலநடுக்க அனுபவத்தை உணர்கிறேன். இந்த நிலநடுக்கம் சுமார் 4 நிமிடங்கள் நீடித்தது. வீட்டில் இருக்கும் மின்விசிறிகள் மற்றும் விளக்குகள் நகர, சோஃபாக்கள் அலறுவது போல இருந்தது. கீழே ஒரு அமைதியான ஜெனரேட்டர் போன்ற சத்தம், சீக்கிரம் வீட்டிலிருந்து வெளியேறுங்கள் என்பது போல சொல்லியது. நாங்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியே வந்து விட்டோம். தற்போது மீண்டும் வீட்டிற்கே திரும்புகிறோம். பாதுகாப்பாக இருங்கள் கவனித்துக் கொள்ளுங்கள் என்று குஷ்பூ பதிவிட்டு இருக்கிறார். மேலும் தெருக்களில் இறங்கி நிற்கும் புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.


இதேபோல் காஷ்மீரில் உருவாகி வரும் லியோ பட குழுவினருக்கும் ஷூட்டிங்கின் போது நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததாக அப்படத்தின் எழுத்தாளர் ரத்தினகுமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சில நாட்களாக உலகம் முழுவதும் ஆங்காங்கே நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. துருக்கி சிரியா போன்ற நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த நில நடுக்கும் ஆப்கானிஸ்தான் தொடங்கி இந்தியா வரை வரக்கூடும் என பிரபல வல்லுனர் கணித்து இருக்கிறார். அவர் கணிப்பு படி தற்போது டெல்லி மற்றும் பிற பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்