வெற்றிமாறனுக்கு கண் பார்வையில் ஏதோ கோளாறு இருப்பதாக நடிகை குஷ்பூ தெரிவித்திருக்கிறார். ராஜராஜ சோழனை இந்து அரசராக மாற்ற முயற்சிகள் நடப்பதாக சமீபத்தில் வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அதற்கு பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருணாஸ், சீமான் உள்ளிட்டோர் பேசி வரும் நிலையில், பலரும் வெற்றிமாறனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இயக்குனர் மணிரத்னம் ராஜராஜ சோழனை இந்து மன்னராக காட்டியிருக்கிறார் என்று வெற்றிமாறன் சமீபத்தில் பேசியிருந்தார். மேலும் நமது அடையாளங்களை சிறிது சிறிதாக அழிக்க பல முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பாஜகவினர் பலரும் பதிலடி கொடுத்து வந்தனர். ராஜராஜசோழன் இந்து இல்லை என்றால் கிறிஸ்டினா அல்லது முஸ்லிமா வெற்றிமாறன் எந்த தைரியத்தில் இவ்வாறு பேசுகிறார் என்று இயக்குனர் பேரரசு கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் சரத்குமாரிடம் இதுகுறித்து கேள்வி கேட்டபோது, அவர் கோபத்துடன் இதையெல்லாம் நீங்கள் இயக்குனரிடம் போய் கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் கதை இயக்கியவர்களிடமும், எழுதியவர்களிடமும் சென்று கேளுங்கள் என்று காட்டமாக பதில் அளித்து இருந்தார். இதுபோல வெற்றிமாறனுக்கு எதிராக தொடர்ந்து கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்தபடியாக நடிகை குஷ்பூ வெற்றிமாறனின் கருத்து குறித்து தனது பார்வையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
உலகம் எப்படி பார்க்கிறதோ நாமும் அப்படித்தான் பார்க்க வேண்டும். உலகம் உருண்டையாக இருக்கிறது என்று சொன்னால் நாம் அதை நம்ப வேண்டும். இல்லை உலகம் சதுரமாக இருக்கிறது என்று சிலர் வாழ்ந்து கொண்டிருந்தால் அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனின் பார்வையில் தான் குறைகள் இருக்கிறது, அவருக்கு தோன்றுவது மட்டுமே சரி என சொல்வதெல்லாம் முறை கிடையாது. அவருடைய கண் பார்வையில் தான் குறைபாடு என்று தான் நினைப்பதாக குஷ்பு பேசியிருக்கிறார். மேலும் வாரிசு படத்தில் தான் நடிக்கவே இல்லை, வேறு தெலுங்கு படத்தின் நடித்துக் கொண்டிருந்தபோது வாரிசு ஷூட்டிங் நடந்த இடத்திற்கு சென்று விஜயை சந்தித்தேன். அப்போது எடுத்த புகைப்படங்களை வைத்து தான் சிலர் வதந்திகளை கிளப்பி இருந்ததாகவும் குஷ்பூ விளக்கி இருந்தார். அவரின் முழுப் பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..