Categories: சினிமா

இந்த படம் ஃபெயில் ஆயிடுச்சு.! சமந்தாவின் “குஷி” படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.!

வெளியிட்டது

நடிகர் விஜய் தேவார கொண்டா நடிகை சமந்தா ஆகிய நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி திரைப்படம் பற்றி தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். நேற்று வெளியான இந்த படம் குறித்து தனது விமர்சனத்தை கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் காதலுக்குள் ஒரு பிரச்சனை எழுகிறது. அதற்கு காரணம் ஹீரோவின் அப்பா மூடநம்பிக்கைகளையும் கடவுளையும் எதிர்க்கும் நாத்திகராக இருக்கிறார். ஆனால் ஹீரோயினின் அப்பா கடவுள் நம்பிக்கை கொண்ட ஆன்மீகவாதியாக இருக்கிறார். இவர்கள் இருவர் காதல் பற்றி இரு வீட்டிற்கும் தெரிய வருகிறது. அப்போது ஹீரோயின் அப்பா ஹீரோவுக்கு தோஷம் இருப்பதாக கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஃபெயில் ஆயிடுச்சு.! சமந்தாவின் "குஷி" படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.! 1

அந்த தோஷத்தை போக்க வேண்டுமென்றால் ஹீரோவும் ஹீரோவுடைய அப்பாவும் இணைந்து ஒரு யாகம் செய்து பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இதற்கு ஹீரோவின் அப்பா சம்மதிக்கவில்லை. எனவே பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஹீரோயின் அப்பா சொன்னது போலவே இருவருக்குள்ளும் புரிதல் இல்லாமல் சண்டை ஏற்படுகிறது. ஆனால் எதற்காக இந்த சண்டை ஏற்படுகிறது என்பது உப்பு சப்பு இல்லாத காரணமாக இருக்கிறது. ஹீரோவுடைய அப்பா கடவுள் இல்லை என்ற கருத்தை ஆணித்தரமாக முன் வைக்கவில்லை. அதேபோல் ஹீரோயின் அப்பாவும் கடவுள் இருக்கிறார் என்கிற கருத்தை ஆணித்தரமாக முன் வைக்கவில்லை.

உப்பு சப்பில்லாத காரணத்திற்கு சண்டை போடுவது போல காண்பிக்கப்பட்டுள்ளது. விஜய் தேவார கொண்டா தன்னுடைய காட்சிகளில் அவரை பார்க்க வைக்கிறார். பாட்டு மற்றும் சண்டை காட்சிகளில் அவர் தனது பக்கம் கவனத்தை திருப்புகிறார். தந்தை பெரியார் சொல்வது போல பரீட்சைக்கு செல்ல வேண்டுமென்றால் படித்துவிட்டு செல்ல வேண்டும், ஊரில் உள்ள சாமியை கும்பிட்டு விட்டு செல்லக்கூடாது என்பார். அது போல தான் படம் எடுப்பவர்கள் திரைக்கதையும், நல்ல கதையுடன் எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஊரில் இருக்கிற சாமி எல்லாம் கும்பிட்டு எடுத்தால் இதுபோலத்தான் ஃபெயிலாகும் என்று காட்டமாக விமர்சித்தார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்