Categories: சினிமா

ஒருவழியா HARD DISK கிடைச்சிட்டு..! லால்சலாம் OTT-க்கு வரப்போகுது..! Aishwarya Rajinikanth பேட்டி..!

வெளியிட்டது

இயக்குனர் ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து லால்சலாம் படத்தை இயக்கி இருந்தார். லைக்கா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். விக்ராந்த், விஷ்ணு விஷால் , செந்தில் , லிவிங்ஸ்டன் என பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.

ஒருவழியா HARD DISK கிடைச்சிட்டு..! லால்சலாம் OTT-க்கு வரப்போகுது..! Aishwarya Rajinikanth பேட்டி..! 1

இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்துவிட்டதாகவும், இருப்பதை வைத்து படத்தை முடித்து வெளியிட்டதாகவும் அதுதான் தோல்விக்கு காரணம் என கூறி இருந்தார். இதனை தொடர்ந்து இந்த படத்தை ஓடிடி நிறுவனங்கள் வாங்க மறுப்பு தெரிவித்தது. இதனால் படம் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது தொலைந்துபோன ஹார்டிஸ்க் கிடைத்துவிட்டதாகவும், படம் அனைத்து காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார். நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட்ல் இப்படம் வெளியாகும் என தகவல் கிடைத்து இருக்கிறது. ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக காத்து இருக்கின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்