Categories: சினிமா

பேரன்கள் மற்றும் விஷ்ணு விஷால், விக்ராந்துடன் ‘லால் சலாம்’ படத்தை பார்த்து ரசித்த லதா ரஜினிகாந்த்.!

வெளியிட்டது

ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ‘லால் சலாம்’ திரைப்படம் இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

பேரன்கள் மற்றும் விஷ்ணு விஷால், விக்ராந்துடன் 'லால் சலாம்' படத்தை பார்த்து ரசித்த லதா ரஜினிகாந்த்.! 1

இந்த படத்தை காண்பதற்காக இந்த படத்தின் ஹீரோக்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் லதா ரஜினிகாந்த் உடன் இன்று திரையரங்குக்கு வந்து படத்தை பார்த்து ரசித்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் ‘லால் சலாம்’. விளையாட்டில் இருக்கும் மத அரசியலையும், மத நல்லிணக்கத்தையும் விரிவாக பேசும் படமாக இந்த படம் இருந்து வருகிறது. இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் பாடல்கள், ட்ரெய்லர், டீசர் என அனைத்தும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. அதற்கு மற்றொரு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டாரின் கேமியோ ரோல்தான். இந்த படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருந்தார்.

இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் பலரும், படம் மிகவும் நன்றாக இருந்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் லதா ரஜினிகாந்த் உடன் இணைந்து இந்த படத்தை தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாடி பார்த்து ரசித்திருக்கின்றனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

Instagram Video Embed Credits: Vishnu Vishal

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்