Categories: சினிமா

திடீரென காஷ்மீருக்கு கிளம்பி சென்ற லெஜெண்ட் சரவணன்.! அவரே வெளியிட்ட வீடியோ இதோ.!

வெளியிட்டது

லெஜன்ட் சரவணன் தற்போது காஷ்மீரில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதனால் அவர் லியோ படத்தில் இணைகிறாரா என்றும், லோகேஷ் கணவரின் யூனிவர்சில் அண்ணாச்சி இணையப் போகிறார் என்றும் தற்போது தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. சென்னையில் பிரபல துணிக்கடை நிறுவனத்தை நடத்தி வருபவர் தி லெஜெண்ட் சரவணன். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளராக இருக்கும் இவர் ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்தார். குறிப்பாக தமன்னா, ஹன்சிகா போன்றவர்களுடன் அவர் தோன்றி நடித்தது பெரும் கேலிக்கு உள்ளானது. பலராலும் மிகவும் மோசமாக உருவக் கேலி செய்யப்பட்டார் லெஜெண்ட் சரவணன். இருந்தபோதிலும் தொடர்ந்து மனம் தளராமல் விளம்பரங்களில் நடித்து வந்த அவருக்கு படத்தில் நடிக்கும் ஆசையும் வந்தது. அதனால் அவர் தி லெஜன்ட் என்கிற படத்தை அவரே தயாரித்து நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திடீரென காஷ்மீருக்கு கிளம்பி சென்ற லெஜெண்ட் சரவணன்.! அவரே வெளியிட்ட வீடியோ இதோ.! 1
இந்தப் படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியிருந்தபோதிலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பலரும் குடும்பம் குடும்பமாக அந்த படத்தை சென்று பார்த்து வந்தனர். அடுத்தபடியாக லெஜன்ட் சரவணன் அடுத்தடுத்த படங்களில் தமிழ் நடிப பார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். பேட்டிகளின் போது விரைவில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று லெஜென்ட் சரவணன் பேசி வரும் நிலையில் தற்போதைய அவர் காஷ்மீருக்கு சென்று இருக்கிறார். அந்த வீடியோவை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஒருவேளை லெஜன்ட் சரவணனும் லியோ படத்தில் நடிக்க இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலரோ லெஜன்ட் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜன் யூனிவர்சில் லெஜன்ட் இணைய இருக்கிறார் என்றும் தங்களது யூகங்களை பரப்பி வருகின்றனர்.


ஆனால் இது குறித்த எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஒரு வேளை சரவணன் விடுமுறை கழிப்பதற்காக கூட அங்கு சென்று இருக்கலாம். லோகேஷ் கனகராஜ் அல்லது லெஜன்ட் சரவணன் இடமிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் தான் இந்த உண்மை தன்மை தன்மை குறித்து தெரியவரும் தெரியவரும். தற்போது லெஜன்ட் வெளியிட்டு இருக்கும் வீடியோவை நீங்களும் காண கீழே உள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்