Categories: சினிமா

தளபதியை தொடர்ந்து காஷ்மீரில் போட்டோஷூட் நடத்திய லெஜெண்ட் சரவணன்.! அடுத்த பட அறிவிப்பு விரைவில்.!

வெளியிட்டது

பிரபல துணிக்கடை உரிமையாளராக இருக்கும் லெஜெண்ட் சரவணன் காஷ்மீரில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பகிர்ந்த அவர், “எல்லாம் தயாராக இருக்கிறது. விரைவில் தனது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று அறிவித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தளபதியை தொடர்ந்து காஷ்மீரில் போட்டோஷூட் நடத்திய லெஜெண்ட் சரவணன்.! அடுத்த பட அறிவிப்பு விரைவில்.! 1
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ். சிறிய குண்டூசி தொடங்கி மிகப்பெரிய பாத்திரம் வரை அனைத்தும் கிடைக்கும் இடமாக இந்த கடை இருந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் ஜவுளி கடலாகவும் இந்த கடை இருந்து வருகிறது. சென்னையில் பல கிளைகளைக் கொண்ட இந்த கடையின் உரிமையாளராக இருப்பவர்தான் லெஜெண்ட் சரவணன். இவர் ஆரம்பத்தில் தனது துணிக்கடை விளம்பரங்களில் தோன்றி நடித்து வந்தார். அப்போது பலராலும் விமர்சிக்கப்பட்டார்.


இருந்தபோதிலும் தொடர்ந்து துணிக்கடை விளம்பரங்களில் நடித்து வந்த அவர், பின்னர் படங்களில் நடிக்கும் ஆசையின் காரணமாக ‘தி லெஜன்ட்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தை தயாரிக்க யாரும் முன் வராத காரணத்தினால், சரவணா ஸ்டோர்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை அவரே தொடங்கி தனது படத்தை தயாரித்திருந்தார்


இந்தப் படம் ஆரம்பத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்ட நிலையில், பின்னர் பலரும் இந்த படத்தை விரும்பி பார்த்தனர். தொடர்ந்து தனது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை விரைவில் லெஜெண்ட் வெளியிடுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், இன்று அவர் காஷ்மீரில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.


அதில், “எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. வேலைகள் தொடங்கி விட்டன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று அவர் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். மேலும் ‘அன்பானவன்’ என்கிற ஹேஷ்டேக் ஒன்றையும் அவர் பகிர்ந்து இருப்பதால்_ அவருடைய அடுத்த படத்தின் தலைப்பு ‘அன்பானவன்’ என இருக்கக்கூடுமோ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


ரசிகர்கள் பலரும் லெஜன்ட் சரவணாவின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Twitter Original Source From: The Legend Saravanan.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்