இந்த காக்கா கழுகு கதையால எந்த பிரயோஜனமும் இல்ல.! நம்ம உழைச்சா தான் நம்ம முன்னேற முடியும்.!

வெளியிட்டது

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக இருக்கும் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், காக்கா கழுகு கதைகள் குறித்து பேசி ரஜினி மற்றும் விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் இரு பெரும் துருவங்களாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் விஜய். அடுத்த தலைமுறை நடிகரான விஜய், முந்தைய தலைமுறை நடிகரான ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை பெறுவதற்கு ஆசைப்படுவதாக சில நாட்களாக இணையத்தில் சண்டை பெரிதாகிக் கொண்டே போனது. ‘ஜெயிலர்’ பட பாடல் வெளியீட்டு விழாவின் போது கழுகு கதை ஒன்றை கூறியிருந்தார் ரஜினி. அது விஜயைதான் மறைமுகமாக கூறியிருப்பதாக சர்ச்சை எழுந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த காக்கா கழுகு கதையால எந்த பிரயோஜனமும் இல்ல.! நம்ம உழைச்சா தான் நம்ம முன்னேற முடியும்.! 1

தொடர்ந்து ‘லியோ’ வெற்றி விழாவில் பேசிய விஜய், தனது பாணியில் ஒரு குட்டி கதை ஒன்றை கூறியிருந்தார். அதில் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில கருத்துக்களை கூறினார். இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் இது குறித்து தொடர்ந்து இணையத்தில் கடுமையாக சண்டையிட்டனர். இந்த நிலையில் ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் பலரின் கவனத்தைப் பெற்ற லெஜன்ட் சரவணன் இதுகுறித்து கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் பேசிய அவர், “காக்கா, கழுகு கதையால் எந்த பிரயோஜனமும் கிடையாது. இந்த பட்டம் இவருக்கு, இந்தப் பட்டம் இவருக்கு என்று சொல்வதால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை.

நாம் உழைத்தால் தான் உயர முடியும். நாம் உயர்ந்தால் நம் நாடும் உயரும். அன்பால் இணைந்து செயல்படுவோம்” என்று பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது..! நீங்களும் அவர் பேசிய காணொளியை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: ABP Nadu

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்