Categories: சினிமா

ஆசிரியர் நடிகர் விஜய்க்கு எழுதிய கடிதம்!

வெளியிட்டது
ஆசிரியர் நடிகர் விஜய்க்கு எழுதிய கடிதம்! 1

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். டெல்லியில் இரண்டுகட்டமாக நடந்து முடிந்த படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.

சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோது பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் ஷூட்டிங் நடந்தது. அங்குள்ள மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள் விஜய்யுடன் ஒரு சில நிமிடம் பேச வேண்டும் என்று கூறி காத்திருந்தனர்.

ஆனால் அதை அவரிடம் யாரும் சொல்லவில்லை. படப்பிடிப்பு முடிந்து விஜய்யும் புறப்பட்டு சென்றார். இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சம்பவத்தை ஆசிரியர் ஒரு கடிதம் மூலம் வெளியிட்டிருந்தார். தற்போது அது விஜய்யின் கவனத்துச் சென்றது. உடனே விஜய் நடந்த சம்பவத்துக்கு வருத்தப்பட்டார். கர்நாடகாவில் படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்ததும் குறிப்பிட்ட பள்ளிக்கு வந்து மாணவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்