Categories: சினிமா

விக்னேஷ் சிவன் இயக்கும் “LIK” படத்தின் SJ SURIYA போஸ்டர் வெளியீடு..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாகி இன்று முன்னணி இயக்குனராக உருவெடுத்து உள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படம் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தின் வெற்றி இவரை முன்னணி இயக்குனராக உருமாற்றியது. தற்போது இவர் நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்குவதாக அறிவித்து இருந்தார்.

விக்னேஷ் சிவன் இயக்கும் "LIK" படத்தின் SJ SURIYA போஸ்டர் வெளியீடு..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! 1

இப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது. இந்நிலையில் இப்படம் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டது மிகப்பெரிய வருத்தத்தை ரசிகர்களுக்கு கொடுத்து இருந்தது. தற்போது இவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வைத்து லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது.

அண்மையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று இருந்த நிலையில், தற்போது இப்படத்தில் நடித்து வரும் நடிப்பின் அரக்கன் எஸ் ஜே சூர்யா போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டரை பார்த்த எஸ் ஜெ சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்