Categories: சினிமா

லிங்குசாமியை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க உத்தரவு, அதிரடி காட்டிய நீதிமன்றம்

வெளியிட்டது

இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிப்பதாக சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழ் சினிமாவின் முண்ணனி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் லிங்குசாமி. இவர் 2001ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனவர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தொடர்ந்து ரன், ஜேஜே, பீமா, சண்டகோழி, பையா போன்ற பல நல்ல படங்களை இயக்கினார். இவர் கடைசியாக இயக்கிய இரு படங்கள் அஞ்சான் மற்றும் சண்டக்கோழி 2 சரியாக ஓடவில்லை. பெரிய தோல்விக்குப் பிறகு படங்கள் எதுவும் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு “தி வாரியர்” படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் எதிர்ப்பார்த்த அளவு வெற்றியை தரவில்ல. படம் வந்த தடமே தெரியாமல் போய்விட்டது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

லிங்குசாமியை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க உத்தரவு, அதிரடி காட்டிய நீதிமன்றம் 1

சமீபத்தில் மேடையில் பேசிய லிங்குசாமி தன் தோல்விகள் பற்றி உணர்ச்சி பொங்க பேசினார். அப்போது தான் வீடு, கார் அனைத்தையும் இழந்துவிட்டதாக கூறி கதறி அழுதார். இந்த நிலையில் அவரை கைது செய்து 6 மாத காலம் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிகை சமந்தா நடிப்பில் எண்ணி ஏழு நாள் திரைப்படத்தை தயாரிப்பதற்காக திருப்பதி பிரதர்ஸ் பிவிபி கேப்பிடல் என்ற நிதி நிறுவனத்திடம் ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றது. இந்த கன்னை திருப்பி தராமல் அடுத்து அடுத்து அவர்கள் படங்களை தயாரித்து வந்த்தால் பிவிபி கேபிட்டல் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதனால் லிங்குசாமி தரப்பில் 1 கோடியே 3 லட்சத்திற்கான காசோலை அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

 

ஆனால் வங்கியில் போதிய காசு இல்லாததால் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் மீது செக் மோசடி வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பணமில்லாத காசோலையை வழங்கி ஏமாற்றிய வழக்கில் லிங்குசாமிக்கு ஆறுமாதம் சிறைதண்டணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்