என் வீடு கார் எல்லாம் போச்சு..ஆனாலும்..! தனக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து கதறி அழுத லிங்குசாமி ..

வெளியிட்டது

தமிழ் சினாமாவின் முண்ணனி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் லிங்குசாமி. இவர் குடும்பத்தின் ஒற்றுமையை சொல்லும் ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். 2001ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தொடர்ந்து ரன், ஜேஜே, பீமா, சண்டகோழி, பையா போன்ற பல நல்ல படங்களை இயக்கினார். இவர் கடைசியாக இயக்கிய இரு படங்கள் அஞ்சான் மற்றும் சண்டக்கோழி2 சரியாக ஓடவில்லை. பெரிய தோல்விக்குப் பிறகு படங்கள் எதுவும் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு “தி வாரியர்” படத்தை இயக்கியுள்ளார். ராம் பொத்தினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி, ஆதி போன்றவர்கள் நடித்துள்ளனர். இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஜூலை 14 இந்த படம் ரிலீஸ் ஆகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

என் வீடு கார் எல்லாம் போச்சு..ஆனாலும்..! தனக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து கதறி அழுத லிங்குசாமி .. 1

இந்த படத்தின் புல்லட் பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு வரை இன்ஸ்டாகிராமை திறந்தாலே புல்லட் பாடல் தான் கேட்டது. பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் படத்தின் ட்ரைலரும் வெளியாகி இருந்தது. போலீஸ் அதிகாரியாக ராம் பொத்தேனியும், வில்லனாக ஆதியும் நடிப்பில் அசத்தியிருந்தனர். ட்ரைலர் காஸாக இருப்பதால் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஷங்கர், மணிரத்னம் போன்றவர்கள் கலந்து கொண்டு படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது மேடையில் லிங்குசாமி தன் தோல்விகள் பற்றி உணர்ச்சி பொங்க பேசினார். அப்போது தான் வீடு, கார் அனைத்தையும் இழந்துவிட்டதாக கூறி கதறி அழுதார். திரையுலகில் பல தோல்விகள் ஏற்பட்டு இருந்த போதிலும் என்னைச் சுற்றி நல்ல நண்பர்கள் இருப்பதால்தான் மீண்டு வந்து இருக்கிறேன் என்று கூறினார். பொன்னியின் செல்வன் வேலைகளில் பிஸியாக இருந்த போதிலும் மணிரத்னம் இந்த விழாவிற்கு வர சம்மதித்தார். அதே போல இயக்குனர் ஷங்கர், பாரதிராஜா இருவரும் எனக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்று கூறினார். தன்னுடைய வீடு, கார் என அனைத்தையும் இழந்துவிட்டதாகவும், ஆனால் நான் சேர்த்து வைத்த நண்பர்கள் எனக்காக இருப்பார்கள் என கண்ணீர் மல்க பேசினார் லிங்குசாமி.
அவரின் பேச்சை நீங்களும் காண.. WATCH THE BELOW VIDEO…

Youtube Video Code Embed Credits: Shruti TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்