Categories: சினிமா

புது தொழிலை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்.! அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

வெளியிட்டது

தமிழ் திரை உலகின் இளம் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார். அந்த தகவலை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். வங்கி வேலை பார்த்து வந்த லோகேஷ் கனகராஜுக்கு படங்களை இயக்குவதில் ஆர்வம் ஏற்பட்டது. ‘மாநகரம்’ படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்ற தந்த நிலையில், தொடர்ந்து கார்த்தி உடன் ‘கைதி’, விஜயை வைத்து ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’, கமலை வைத்து ‘விக்ரம்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றி படங்களாகவே அமைந்திருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புது தொழிலை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்.! அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! 1
அடுத்ததாக ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ படத்தை இயக்க இருக்கிறார். இந்த நிலையில் லோகேஷ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தொடர்ந்து ஐந்து படங்களை இயக்கி, ஐந்தையும் வசூல் ரீதியாக, வெற்றி படங்களாக மாற்றி காட்டி இருக்கிறார். இயக்கத்தில் இருந்து விலகி தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார். ஐந்து படங்களை இயக்கிய பின்பு தன்னுடைய முதல் ப்ரொடக்ஷன் நிறுவனம் ‘G Squad’ என்கிற நிறுவனத்தை துவங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். முதல் சில படங்களை தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்களுக்காக செலவிட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.


இதுவரை தனக்கு வாய்ப்பு கொடுத்த நல்ல உள்ளங்கள் அனைத்திற்கும் நன்றி தெரிவித்திருக்கும் அவர், தன்னுடைய முதல் தயாரிப்பு குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் தொடங்க இருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவில் ரோலக்ஸ் ஸ்கார்பியோ போல டிசைன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Twitter Original Source: Lokesh Kanagaraj

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்