Categories: சினிமா

ரசிகரின் டீக்கடையை திறந்து வைக்க நேரில் வந்த லோகேஷ்.! வேற லெவல் அண்ணா நீங்க..!

வெளியிட்டது

‘மாநகரம்’ என்ற தனது முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனால் அவருக்கு தமிழில் முன்னணி நடிகரான விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூன்றாவது படமே மிகப்பெரிய நடிகரான விஜயை வைத்து ‘மாஸ்டர்’ என்ற படத்தை இயக்கினார். இவர் இயக்கிய மூன்று படங்களுமே தொடர்ந்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனால் குறுகிய காலத்திலேயே, இளம் வயதிலேயே முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் உயர்ந்தார். அடுத்ததாக அவர் செய்த சம்பவம் மிகப்பெரியதாக இருந்தது. உலகநாயகன் கமலஹாசனை வைத்து ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ரசிகரின் டீக்கடையை திறந்து வைக்க நேரில் வந்த லோகேஷ்.! வேற லெவல் அண்ணா நீங்க..! 1

வங்கியில் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு சினிமா துறைக்கு வந்த இவருக்கு, விக்ரம் படம் மிகப்பெரிய பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்துள்ளது. உலக அளவில் 500 கோடிக்கும் மேலாக வசூலை குவித்ததாக தகவல்கள் வெளியானது, தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் என்ற பட்டியலில் விக்ரமும் மாஸ்டரும் இணைந்துள்ளன. முதல் இடத்தில் விக்ரமும், இரண்டாவது இடத்தில் மாஸ்டரும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் அடுத்ததாக விஜயை வைத்து தளபதி 67 என்ற படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியான பின்பு, தளபதி 67 என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அறித்து இருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் லோகேஷின் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் தனது ரசிகர் ஒருவர் டீ கடை திறப்பு விழாவிற்கு அழைத்துள்ளார். பெருந்தன்மையாக கடை திறப்பு விழாவிற்கு வந்த லோகேஷ் கடையை திறந்து வைத்ததோடு மட்டும் இல்லாமல் காசு கொடுத்து முதல் டீயை வாங்கி குடித்தார். லோகேஷின் இந்த வீடியோ பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஓடாத படத்தை எடுத்துவிட்டு இல்லை ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு, சிலர் ஓவராக சீன் போட்டு வரும் நிலையில் எடுத்த 3 படங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் மிக எளிமையாக நடந்து கொள்கிறார் என்று லோகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்