தமிழ் திரையுலகமும்,ரசிகர்களும் எதிர்பார்த்து இருக்கும் ஒரே படம் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி,ஃபகத் ஃபாசில், நரேன் நடிப்பில் உருவாகியுள்ள “விக்ரம்” படம் தான். 1986இல் வெளியான நடிகர் கமலின் விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக வெளியாக இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 15ஆம் தேதி வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே ட்ரெண்ட்டிங்கில் முதல் இடத்திற்கு வந்தது. அந்த அளவிற்கு படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு காரணம் படத்தில் நடித்துள்ள நடிகர்கள்.கமல்,விஜய் சேதுபதி,ஃபகத் ஃபாசில் என மூவருமே நடிப்பில் ரசிகர்களை அசத்த கூடியவர்கள் என்பதாலேயே. படத்தின் மற்றொரு மிக பெரிய எதிர்பார்ப்பு இயக்குனர் லோகேஷ். இவருடைய முதல் படமான “மாநகரம்” படத்திலேயே மிக பெரிய வரவேற்பை பெற்றார். பின்னர் “கைதி”, இந்த படம் குறித்து மக்களுக்கு ஒருவர் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சில வருடங்களில் வெளியான மிக சிறப்பான அக்ஷன் படம் இது. அடுத்து தளபதியுடன் “மாஸ்டர்”. 2 வருட கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த திரையரங்கு உரிமையாளர்களை மீட்டெடுத்த பிளாக் பஸ்டர் படம் அது.
எடுத்த 3 படங்களிலும் நேர்த்தியான திரைக்கதை மூலம் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்த இவர் இப்பொது தன்னுடைய 4வது படத்தில் 3 பெரும் நாயகர்களை இயக்கி உள்ளார். வெளியான ட்ரைலரை கொண்டு ரசிகர்கள் இது அதுவா இருக்குமோ, அது இதுவா இருக்குமோ என யூகித்து வருகின்றனர். ஒரு படி மேலே பொய் படத்தில் நடிங்கர் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது தற்போது அதிகாரபூர்வ செய்தியாக உள்ளது.
இந்நிலையில் விக்ரம் படத்திலும் ஒரு இரவில் நடக்கும் கடத்தல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ரசிகர்கள் பலரும் இந்த படத்தில் அடுத்து லோகேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள “கைதி 2” படத்திற்கான லீட் இதில் இருக்கும் என கூறிவருகிறார்கள். ஆனால் உண்மையில் லோகேஷ் கைதி படத்துலேயே விக்ரம் படத்திற்கான லீட்டை வைத்துள்ளார் என்பது நாம் யார் அறியவில்லை.
தற்போது சமூகவலைத்தளத்தில் கைதி படத்திலிருந்து ஒரு 7 வினாடி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் போலீஸ் அதிகாரியான நரேன், வில்லன் கூட்டத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரியிடம் போனில் “கோஸ்ட் பத்தி தெரிஞ்சிது?’ என கேட்பார். அதுவே இப்பொது பயங்கர பேசும் பொருளாகி உள்ளது.
விக்ரம் படத்தின் முதல் போஸ்டரே “there lived a ghost” என தான் இருக்கும். இதனை இப்பொது பார்த்து ரசிகர்களை உண்மையில் இதை தான் லோகேஷ் மறைமுகமாக கூறியுள்ளார் என எதிர்நோக்கி உள்ளனர். படத்தில் சூர்யா என வேடம் எனவும் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. சூர்யா கோஸ்டா இல்லை கமல் கோஸ்டா என படம் வெளிவந்த பின் நமக்கே தெரிந்து விடும். ஆனால் அதற்குள் அறப்போருக்காத ரசிகர்கள் இன்னும் படம் வெளியாக 3 வரன்கள் உள்ளதே என பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.
Video Courtesy – Film Stop