இலங்கையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்தான் லாஸ்லியா மரியநேசன். இவரது அழகான தமிழ் உச்சரிப்பும், அழகு தமிழில் இவரது பேச்சு நடையும் இவரை பிக்பாஸ் என்னும் பிரபல நிகழ்ச்சிக்கு வரவழைத்தது. படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தவர்களும், இனிமேல் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் பிரபலங்களை மட்டுமே அழைத்து நிகழ்ச்சி நடத்தும் பிக்பாஸ் ஷோ, லாஸ்லியா போன்ற தமிழ் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்களை அழைத்து வந்து அவரை பிரபலமாக்கியுள்ளது. இன்று லாஸ்லியா இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவருடன் பிக்பாஸில் பயணித்த தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்துள்ளார். வீடியோ கீழே உள்ளது

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு இறுதி 4 போட்டியாளர்களுள் ஒருவராக வந்தார். இவர் பிக்பாஸில் இருந்தபோது கவினும் இவரும் காதலிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டது. லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்தபோது கவினுடனான காதலைப் பற்றி லாஸ்லியாவை திட்டித் தீர்த்தார். தன்னால் வெளியில் தலை காட்டமுடியவில்லை என்றும் அவரை திட்டினார். அந்த வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலானது. பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த பிறகு கவின் மற்றும் லாஸ்லியா காதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. தற்போது லாஸ்லியா, கவின் இருவரும் பல படங்களில் நடித்து வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7
சமீபத்தில் லாஸ்லியா தர்ஷன் நடிப்பில் கூகுள் குட்டப்பா திரைப்படம் வெளியானது.மேலும் குக் வித் கோமாளியில் பிரபலமான அஸ்வினுடன் இணைந்து பேபி நீ சுகர் என்ற ஆல்பம் பாடலில் ஆடியிருப்பார் லாஸ்லியா. இதற்கு சாண்டி மாஸ்டர் தான் கோரியோகிராஃபர். மேலும் சாண்டியின் நடன பள்ளியில் லாஸ்லியா நடனம் ஆடி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். வெறித்தனமாக ஆடிய வீடியோவை லாஸ்லியா தன்னுடைய ஷோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the Below Video..