தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று உள்ளவர் தினேஷ். அட்டகத்தி படத்தின் வெற்றி இவரை முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருமாற்றியது. தொடர்ந்து திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , விசாரணை என வெற்றிப்படங்களை படங்களை கொடுத்து முன்னணி நாயகன் என்ற இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து இருக்கிறார் அட்டகத்தி தினேஷ். பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அட்டகத்தி தினேஷ் அண்மையில் ஜெ பேபி என்ற படத்தில் நடித்து இருந்தார். ஊர்வசி நடிப்பில் வெளியான இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அட்டகத்தி தினேஷ் அசத்தி இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார் அட்டகத்தி தினேஷ். தற்போது இவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து லப்பர் பந்து என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
தற்போது படக்குழுவினர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.இப்படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதற்கு அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.