Categories: சினிமா

அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து மிரட்டும் லப்பர் பந்து படத்தின் ட்ரைலர் இதோ..!

வெளியிட்டது

அட்டகத்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று உள்ளவர் தினேஷ். இப்படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகராக உருமாற்றியது. இப்படத்திற்கு பிறகு திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , விசாரணை என ஹிட் படங்களை கொடுத்து தனக்கான நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து இருக்கிறார் அட்டகத்தி தினேஷ். பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து மிரட்டும் லப்பர் பந்து படத்தின் ட்ரைலர் இதோ..! 1

தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அட்டகத்தி தினேஷ் அண்மையில் ஜெ பேபி என்ற படத்தில் நடித்து இருந்தார். ஊர்வசி நடிப்பில் வெளியான இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அட்டகத்தி தினேஷ் அசத்தி இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார் அட்டகத்தி தினேஷ். தற்போது இவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து லப்பர் பந்து என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இப்படத்தின் சான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் இவர்களுடன் காளி வெங்கட்,தேவதர்ஷினி, பாலசரவணன் மற்றும் TSK நடித்து உள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : SONY MUSIC SOUTH

வெளியிட்டது

புதிய செய்திகள்