இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் லக்கி பாஸ்கர்.இப்படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சௌத்திரி நடித்து உள்ளார்.இப்படத்தின் விமர்சனத்தை கீழே காணலாம்.

படத்தின் கதை
வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வருபவர் துல்கர் சல்மான். கடன் தொல்லையால் முதல் முறையாக பாதை மாறுகிறார் துல்கர். இதனால் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் விமர்சனம்
பாஸ்கர் ஆக வரும் துல்கர் சல்மான் தனது கதாபாத்திரத்தை கட்சிதமாக செய்து உள்ளார். ஏழையாக இருக்கும் சல்மான் ஒரு கட்டத்திற்கு மேல் பணக்காரனாக மாறுகிறார். உடனுக்குடன் அவர் மாற்றும் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. கதாநாயகியாக வரும் மீனாட்சி சௌத்ரி நடிப்பால் அசத்தியுள்ளார்.30ஆண்டுகளுக்கு முன்பு நடப்பது போல கதையை கட்சிதமாக கொண்டு சென்று உள்ளார் இயக்குனர். நடிகர்கள் அனைவரும் தங்களது நடிப்பில் சிறப்பாக நடித்து உள்ளனர். துல்கர் பல இடத்தில் பேசும் வசனங்கள் பெருமளவு கைதட்டல்களை பெற்று உள்ளது.ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து உள்ளது.