நீண்ட காலமாக போராடி தனக்கென தமிழ் திரையுலகில் தனி இடத்தையும், மிக பெரிய ரசியகர் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. தனுஷ், கார்த்தி படங்களில் துணை நடிகராக இருந்து பின், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் கூறும் படங்களில் நடித்து வந்த இவர், பிட்சா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அன்று முதல் இன்று வரையிலும் நடுவில் சில சறுக்கல்கள் சந்தித்தாலும் நெடுநெடுவேன வளர்ந்து கொண்டே போகிறார். சூது கவ்வும், கவண், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான், தென்மேற்கு பருவக்காற்று, இப்பொது கடைசியாக வெளியான விக்ரம் படம் வரை அனைத்திலும் தனக்கென ஒரு தனி பாணியை கொண்டு சிறப்பாக நடித்து வருகிறார்.
தமிழை தாண்டி இப்பொது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் சிறப்பாக நடிதய வருகிறார். ஹிந்தியில் விரைவில் வீபி தொடர் ஒன்றும், மாநகரம் படத்தின் ரீமேக் படத்தின் மூலமும் அங்கும் அறிமுகமாக உள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு தேசிய விருதும் வாங்கி உள்ளார்.
இவரை முதல் முறை நாயகனாகிய இயக்குனர் சீனு ராமசாமியுடன் இவர் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் தர்மதுரை என இரண்டு படங்களில் பணியாற்றியுள்ளார். இரண்டுமே வணிக அளவிலும், விமர்சன அளவிலும் சிறப்பான வெற்றியை அடைந்த படங்கள்.
இப்பொது மூன்றாவது முறையாக இருவரும் “மாமனிதன்” படத்தில் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு யுவனும், இளையராஜாவும் இணைந்தே இசையமைத்துள்ளனனர்.
நீண்ட காலமாக பல்வேறு நிகழ்வுகளால் தடைபெற்று வந்த இந்த படம் வருகிற ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுளள்து. படத்தை நடிகரும், விநோயோகிஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியிடுகிறார். அதுமட்டுமின்றி கன்னடத்திலும் படம் வெளியாக உள்ளது.
இன்று வெளியிட்டு தேதியை அறிவித்து, படத்தின் ப்ரோமோஷன் பணிகளையும் துவங்கியுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி. தன்னை திரையுலகிற்கு வர ஊக்குவித்த தமிழ் சினிமா மாமேதைகள் திரு.எம்.ஜி.ஆர், மற்றும் திரு. கலைஞர் மற்றும் சிவாஜி அவர்களுக்கு மாலை அணிவித்து பணிகளை துவங்கியுள்ளார்.
தனி ஹீரோவாக பான் இந்திய மார்க்கெட்டில் படம் வெளியிடாத விஜய் சேதுபதி, முதல் முறையாக அந்த களத்தில் இறங்கியுளளார். இதில் அவர் வெற்றியடைவரா இல்லையா என்பதை கொஞ்சம் நாட்களை தெரிந்துவிடும்.