சர்ச்சைகளுக்கு நடுவே சைலன்ட்டாக சாதித்து காட்டிய மாமன்னன்.! ஒரே வாரத்தில் செய்த புது சாதனை.!

வெளியிட்டது

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம். தற்போது இந்த திரைப்படம் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளது. ஓடிடி தளத்தில் வெளியான ஒரே வாரத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை அள்ளி சாதனை படைத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு பகத் பாஸில் உள்ளிட்ட பலர் நடிப்பின் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

சர்ச்சைகளுக்கு நடுவே சைலன்ட்டாக சாதித்து காட்டிய மாமன்னன்.! ஒரே வாரத்தில் செய்த புது சாதனை.! 1

சமூகநீதி பேசும் கட்சியில் எம்எல்ஏவாக இருக்கும் ஒருவர் சாதி வெறி பிடித்த மாவட்ட செயலாளரால் எவ்வாறு அதிகாரத்தை அடைய முடியாமல் தவிக்கிறார் என்பதை விளக்கும் படமாக இது இருந்தது. இந்த நிலையில் இந்தப் படம் ஓடிடியில் கடந்த வாரம் வெளியானது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி இருந்தது. தற்போது வெளியான தகவலின்படி ஒரே வாரத்தில் இந்த படம் சுமார் 1.2 மில்லியன் பார்வையாளர்களை பற்றி சாதனைப்படைத்து இருக்கிறது. பல ஆங்கில படங்களுடன் மோதி மாமன்னன் திரைப்படம் தற்போது புதிய சாதனையை படைத்திருக்கிறது.

சில நாட்களாக மாமன்னன் திரைப்படம் குறித்த சர்ச்சை இணையத்தில் வைரலாகி வருகிறது. சாதி வெறி பிடித்த மாவட்ட செயலாளராக இருக்கும் பகத் பாசிலின் காட்சிகளை மட்டும் வெட்டி பலர் தங்களது சாதிய பெருமை பேசும் பாடல்களை போட்டு இணையத்தில் வைரல் ஆக்கி வந்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது சாதிய வெறி பிடித்த நபரை கொண்டாடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று சொல்லி பலரும் இந்த எடிட்டிங் வீடியோக்களுக்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

நடிகர் பகத் பாசிலும் தனது முகநூல் பக்கத்தில் மாமன்னன் பட கதாபாத்திரத்தை டிபியாக வைத்து அதிர்ச்சி கொடுத்திருந்தார். பின்னர் கண்டனங்கள் எழவே அவர் அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கி இருந்தார். இப்படியாக ஒரு பக்கம் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒரு 1.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இந்த வாரத்தில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. பல ஆங்கில படங்களும் முதல் எட்டு இடங்களையும், பத்தாவது இடத்தையும் பிடிக்க ஒன்பதாவது இடத்தை மாமன்னன் பிடித்து சாதனை படைத்து இருக்கிறது. ரசிகர்கள் பலரும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்