Categories: சினிமா

மாமன்னன் படம் நல்லா இருக்கா? இல்லையா? பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் என்ன.? இதோ வீடியோ.!

வெளியிட்டது

இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படமான மாமன்னன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பொதுமக்கள் தங்களது விமர்சனங்களாக கூறி வருகின்றனர். பலரும் கலவையான விமர்சனங்களையே இந்த படத்திற்கு முன் வைத்து வருகின்றனர். கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற படங்களை இயக்கி மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் தற்போது தனது மூன்றாவது படமான மாமன்னன் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரை வைத்து இயக்கியிருக்கிறார். மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் இன்று தமிழகத்தில் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல அரசியலை பேசும் படமாக இந்த படம் இருக்கிறது. சமூக நீதியை முன்வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனராக மாரி செல்வராஜ் இருந்து வருகிறார். அந்த வகையில் மாமன்னன் திரைப்படமும் சாதி குறித்து பேசும் ஒரு படமாகத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாமன்னன் படம் நல்லா இருக்கா? இல்லையா? பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் என்ன.? இதோ வீடியோ.! 1

சேலம் மாவட்டத்தில் ஒரு தனித் தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அவரது கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளராக இருக்கிறார் பஹத் பாசில். இவர் உயர் ஜாதியை சேர்ந்தவர. எனவே இவர் எம்எல்ஏவாக இருக்கும் மாமன்னான வடிவேலுவை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிறார். இதற்கிடையில் வடிவேலுவின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் பஹத் பாசிலின் அண்ணனுக்கும் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் மாமன்னனை எப்படியாவது அடக்கி ஒடுக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார் பஹத் பாசில். அவர்கள் எண்ணம் ஈடேறியதா? இல்லையா? பின்னர் மாமன்னனுக்கு என்ன நடந்தது? என்பது குறித்த கதை தான் இந்த படத்தின் மீதிக்கதை. தற்போது படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் கலவையான விமர்சனங்களை கூறி வருகின்றனர். சாதிய ஒடுக்கு முறைகள் கிராமப் பகுதிகளில் தான் அதிகமாக இருக்கிறது, ஆனால் நகரங்களில் இல்லை. மலையாள படங்கள் போல தமிழ் திரைப்படங்களும் இன்று சாதியை ஓரம் கட்டி வைத்துவிட்டு நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று சிலர் கருத்துக்களை தெரிவித்தனர்.

இன்னும் சிலரோ இது போன்ற சமூக நீதி படங்கள் தொடர்ந்து வரவேண்டும். தான் ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்த போதிலும் தனக்கு கீழ் ஒரு சமூகம் இருக்கிறது என்ற மனநிலை தான் சாதிய வெளிப்பாடு. அந்த நிலை மாற வேண்டும் என்றால் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் தங்களின் படங்கள் மூலமாக இதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்தனர். இன்னும் சிலரோ உதயநிதியின் அரசியலுக்காக இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து சென்றனர். நீங்களும் அவர்கள் கூறிய அந்த விமர்சனத்திற்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Bingo Box

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்