Categories: சினிமா

“Oscar, Cannes அது இது’னு சொல்லிட்டு….இப்படி தேனாம்பேட்ட லெவெலுக்கு இறங்கிடீங்க”!!

வெளியிட்டது

சினிமா துறையில் விமர்சங்கங்ளும், கேலிகளும் நிறையவே இருக்கிறது. குறிப்பாக இந்த டிஜிட்டல் உலகில் அது கொஞ்சம் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கிறது. படம் வெளியான சில மணி நேரங்களிலேயே விமர்சகர்கள் படத்தை குறித்த விஷயத்தை போட்டு உடைத்து விடுகிறார்கள். நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ்  விமர்சனங்கள் இருந்தாலும், மக்களிடம் முதலில் செல்வது நெகட்டிவ் விமர்சங்களே. இதனை மீறி தான் படங்கள் வெற்றியோ அல்ல அதில் மாட்டி தோல்வியோ அனைத்தும் இப்பொது ஒரு சில விமர்சகர்களிடமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"Oscar, Cannes அது இது'னு சொல்லிட்டு....இப்படி தேனாம்பேட்ட லெவெலுக்கு இறங்கிடீங்க"!! 1

சென்ற வாரம் நடிகர் பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான படம் “இரவின் நிழல்”. இந்த படம் சாதாரண ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. எழுத்தாளர் பார்த்திபனை இயக்குனர் பார்த்திபன் இந்த படத்தில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்த நிறையவே மக்களிடம் மேக்கிங்காக பாராட்டுகளை குவித்து வருகிறார் பார்த்திபன்.

நிறைய விமர்சகர்கள் பாராட்டினாலும், எப்போதும் போல ப்ளூ சட்டை மாறன் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனமே கொடுத்துள்ளார். குறிப்பாக “Non-linear singular shot” என்ற பெருமையுடன் இந்த படம் வெளியாக, அதனை ஆரம்பம் முதலே தவறான கருத்து என மாறன் விமர்சனம் செய்து வருகிறார். ஈரானிய மொழியில் “Fish & cat” (2013) ஆம் ஆண்டே இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டதாக அவர் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில் பார்த்திபன் அதனை முற்றிலுமாக மறுத்து வருகிறார்.

இப்போது நடிகர் பார்த்திபனுக்கு ஆதரவாக ட்விட்டர் பயனாளி ஒருவர், “Fish & cat” (2013)” அப்படி படமாக்க படவில்லை என தன்னுடைய கருத்தை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்திபன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அந்த இடியட் மீண்டும் மீண்டும் அவரே கூறிக்கொண்டிருக்குகிறார் என எழுதி பகிர்ந்துள்ளார்.

இதனை பகிர்ந்த மாறன், “பார்த்திபன் மறுபடியும் எதோ ஒரு பயனாளியின் கருத்தை கொண்டு என்னை இடியட் என கூறுகிறார். என்னிடம் ஆதாரம் இருக்கிறது” என எழுதி பார்த்திபனின் டீவீட்டை பகிர்ந்துள்ளார். இருவரும் இவரு மாறிமாறி ஒருவரை ஒருவர் இடியட் என்ற வார்த்தைகளால் திட்டி கொள்வது, மக்களுக்கு கொஞ்சம் சங்கடத்தை தான் கொடுத்துள்ளது.

இந்த வாரம் புதிதாக 2 படங்கள் விமர்சனம் (மகா மற்றும் Dejavu) என இரண்டு படங்களை ரிவியூ செய்துள்ள மாறன், தான் சொல்லுவது பார்த்திபனின் விஷயத்தில் சரியானது என நிரூபிக்கும் வகையில் மீண்டும் தன்பக்கம் உள்ள நியாயத்தை பேசி, மீண்டும் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். அதற்கு பார்த்திபன் பெரிதாக அலட்டிகொள்ளாதது போல தெரிகிறது. இப்பொது மீண்டும் மாறன் பார்த்திபனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.

அண்மையில் படத்திற்கு அவார்ட் கிடைத்துள்ளதாக நடிகர் பார்த்திபன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு பரபரப்பாகினர். இப்பொது அந்த படத்தை மீதான தன்னுடைய அடுத்தகட்ட கேள்விகளை வைத்துள்ளார். அவர் கூறியது, “oscar, cannes film festival அப்படி இப்படி’னு சொல்லிட்டு லிஙகான் book of records’னு ஒரு அவார்ட் வாங்கிட்டு பெருசா சொல்லறாரு. அது என்னடா லிஙகான் book of records’னு பாத்த அது இங்க தேனாம்பேட்டை’ல இருக்கு”

இவர்கள் இருவரின் விவகாரம் கடந்த ஒரு வாரமாகவே சூடு பிடித்து சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. நீங்களும் அந்த விடியோவை காண ….

 

Video Courtesy – TamilTalkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்