Categories: சினிமா

ரிலீசுக்கு ரெடியான மாவீரன்.! வேற லெவல் வீடியோவுடன் சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு.!

வெளியிட்டது

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. வருகிற ஜூலை 14ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமான முறையில் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது மாவீரன். டாக்டர் டான் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணையும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. தற்போது சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். மேலும் அவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், நடிகை சரிதா, நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரிலீசுக்கு ரெடியான மாவீரன்.! வேற லெவல் வீடியோவுடன் சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு.! 1

இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விது அயனா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத் தொகுப்பு செய்திருக்கிறார். பரத் சங்கர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து வண்ணாரப்பேட்டையில என்கிற பாடலும், அந்தாண்ட அந்தாண்ட வங்கக்கரை என்கிற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இன்று மற்றொரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட வீடியோக்களின் தொகுப்புகளை வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். படத்தின் முன் வெளியிட்டு நிகழ்வு (பிரீ ரிலீஸ்) வருகிற ஜூலை இரண்டாம் தேதி சென்னையில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை ஒரு வீடியோவாக தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது. தமிழில் மாவீரன் என்கிற பெயரிலும், தெலுங்கில் மகாவீரடு என்கிற பெயரிலும் இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் டிஜிட்டல் உரிமத்தை சன் தொலைக்காட்சியும், ஓடிடி உரிமையை அமேசான் பிரேம் தளமும் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஜூலை 14ஆம் தேதி ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இந்த படம் உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படம் வருகிறது தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமலஹாசன் தயாரிப்பில் தனது 21வது படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!


Video Embed Code Credits: Shanthi Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்