Categories: சினிமா

“எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்” அதிரடியாக வெளியானது மாவீரன் ட்ரைலர்.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. மண்டேலா படத்தை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகைகள் சரிதா, அதிதி ஷங்கர், யோகி பாபு, இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி, அதன் பின்னர் தற்போது தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் மாவீரன். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி நடித்திருக்கிறார். மண்டேலா படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியிருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்" அதிரடியாக வெளியானது மாவீரன் ட்ரைலர்.! இதோ வீடியோ.! 1
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சரிதா திரைத்துறைக்கு திரும்பி இருக்கிறார். இவர் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மா ரோலில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் வில்லனாக தோன்றியிருக்கிறார். இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஒரு பேண்டஸி ஜேனர் திரைப்படமாகும். இதில் சிவகார்த்திகேயன் ஒரு தனியார் பத்திரிக்கையில் பணிபுரியும் கார்ட்டூனிஸ்ட்டாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. வருகிற ஜூலை 14ஆம் தேதி இந்த படம் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, தமிழகத்தில் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான அந்தாண்ட அந்தாண்ட வங்க கர, வண்ணாரப்பேட்டையிலே என்கிற இரண்டு பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இதில் வண்ணாரப்பேட்டையில் பாடலை சிவகார்த்திகேயனும் அதிதி சங்கரும் இணைந்து பாடி இருக்கின்றனர்.


படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளாக படக் குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மாவீரன் படத்தின் டிரைலரை வெளியிட்டு இருக்கின்றனர். ட்ரெய்லருக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. “எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்” என்ற மாஸான வசனங்களுடன் தற்போது இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. இணையத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கும் அந்த ட்ரைலரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்