நிக்குற இடத்துல விஜய் மாதிரி மறந்து அடிக்கும் SK….மாவீரன் mini teaser”!!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் இப்பொது இருக்கும் இளம் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த வித பின்புலமும் இன்றி, தன்னுடைய மீடியா வாழ்க்கையை விஜய் டிவியில் நகைச்சவை ஆர்டிஸ்டாக துவங்கிய அவர் பின் நட்சத்திர தொகுப்பாளராக உருவெடுத்து மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். பின் மெல்ல இயக்குனர் பாண்டியராஜின் “மெரினா” படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

பின் நடிகர் தனுஷின் தயாரிப்பான “எதிர்நீச்சல்” படம் மூலம் தனியாக நாயகனாக மாறினார். பின்னர் சில படங்கள் நடித்தாலும் இவரை மக்கள் நாயகனாக ஏற்றுக்கொண்ட படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் மூலமே. தனி ஹீரோவாக இவர் அடுத்தடுத்து நடித்த “எதிர் நீச்சல், காக்கி சட்டை, ரஜினி முருகன், நம்ம வீடு பிள்ளை, டாக்டர்” என அனைத்துமே தொடர் வெற்றிப்படங்கள்.

குறிப்பாக கடைசியாக வெளியன் டாக்டர் படம் இவருடைய முதல் 100 கோடி வசூல் படமாக மாறியது. அந்த வெற்றியை தொடர்ந்து கடந்த மே 13ஆம் தேதி வெளியான “டான்” படமும் 100 கோடி கிளப்பில் சேர்ந்தது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, பாலசரவணன், சிவாங்கி என பலர் நடிப்பில் வெளியான இந்த படம் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியானது.காமெடி படமான இதில் காமெடி, பாடல்கள், காதல் காட்சிகள் என சிறப்பாக இருந்தாலும், படத்தின் இரண்டாம் பாதியில் வரும் கடைசி 30 நிமிட செண்டிமெண்ட் காட்சியை வைத்தே படம் இவ்வளவு பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக சமுத்திரக்கனி, சிவகார்திகேயனின் நடிப்பு, அனிருத்தின் மனதை வருடும் இசை, இயக்குனர் சிபியின் எழுத்து என அனைத்துமே மிகவும் சிறப்பாக அமைந்ததால் மட்டுமே படம் மிகவும் கொண்டப்பட்டது.

நிக்குற இடத்துல விஜய் மாதிரி மறந்து அடிக்கும் SK....மாவீரன் mini teaser"!! 1

இப்பொது சிவாவின் நடிப்பில் “பிரின்ஸ்” மற்றும் “மாவீரன்” போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. இதில் யோகிபாபு நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சங்களை பெற்ற படமான “மண்டேலா” படத்தின் இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “மாவீரன்”. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது.  இந்த படத்தின் டீஸர் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. எதிர்த்து நின்றான் என்ற ஹாஷ்டேக்குடன் இந்த படத்தின் பெயர் அறிவிப்பு வந்துள்ளது. சாந்தி டாக்கீஸ் தயாரிக்க இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். அந்த விடியோவை நீங்களும் காண….

Video Courtesy – Shanthi Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்