“சூப் முதல் ஸ்வீட் வரை..விருதுநகர் பரோட்டா முதல் முட்டை தோசை”!!உச் கொட்டவைக்கும் விக்ரம் பட சக்ஸஸ் மீட்டின் சாப்பாடு மெனு!! சமைத்து இந்த நடிகரா?!!

வெளியிட்டது

இப்போதைய தமிழ் சினிமாவின் ஹாட் நியூஸ் லோகேஷ் கனகராஜின் “விக்ரம்” படம் தான் .கிட்டத்தட்ட நான்கு வருட தவமாக காத்திருந்த கமல் ரசிகர்கள் தற்போது விக்ரம் திரைப்படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது.

"சூப் முதல் ஸ்வீட் வரை..விருதுநகர் பரோட்டா முதல் முட்டை தோசை"!!உச் கொட்டவைக்கும் விக்ரம் பட சக்ஸஸ் மீட்டின் சாப்பாடு மெனு!! சமைத்து இந்த நடிகரா?!! 1

இப்போதைய நடிகர்களில் மிகவும் சந்தோசமாக இருக்கும் பல வெற்றி கொண்டாட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வரும் கமல்ஹாசன், நடிகர் கமலஹாசன் தான். 4 ஆண்டுகள் இவர் நடிக்கவில்லை இது மிக பெரிய கம்பேக் என ரசிகர்கள் பொதுவாக கூறினாலும், உண்மையில் தசாவதாரம் படத்திற்கு பிறகு நடிகர் கமல் பெரிய வெற்றியை பெறவில்லை. விஸ்வரூபம் நல்ல வெற்றியை பெற்றபோதிலும் அது ஒரு கமர்சியல் படமாக இல்லாமல் வேறு ஒரு பாணியில் கமல் படமாக்கி வெற்றி கண்டார்.

அந்த போட்டியில் ரஜினி அடுத்தடுத்து பல கமர்சியல் படங்களை அடுத்தடுத்து கொடுத்து மிகவும் முன்னே சென்றார். இன்றைய தலைமுறையும் ஒரு மிக பெரிய கமர்சியல் நாயகனாக இருந்த கமலை கொண்டாட தவறியது. அனைத்திற்கும் முற்றுபுள்ளி வைத்து தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவே கொண்டாடும் படமாக இப்பொது “விக்ரம்” படம் உருவெடுத்துள்ளது. படம் வெளியான இரண்டே வாரங்களில் 300 கோடி வசூலை ஈட்டி இன்னும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் மிரட்டியுள்ள கமலிற்கு பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். உடன் நடித்த விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில்  மற்றும் கடைசி ஐந்தே நிமிடங்களில் வந்து மொத்த ரசிகர்களையும் தன்னுடைய வில்லதனத்தால் மிரட்டி எடுத்துள்ள சூரியா என அனைவருமே மெச்சும் படி தங்களுடைய பங்களிப்பை அளித்துள்ளனர். அனிருத்தின் இசை, லோகேஷின் நேர்த்தியான கதை அமைப்பு என பாராட்டுகளை குவித்தவண்ணம் உள்ளது படம்.

படம் வெளியான முதல் காட்சி துவங்கியே ரசிகர்கள் படத்தை கொண்டாடி வந்தனர். நேற்று படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் மாபெரும் வகையில் நடைபெற்று முடிந்துள்ளது. இயக்குனர் லோகேஷ், கமல்ஹாசன், அனிருத், உதயநிதி என பலர் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடந்தது. இதில் கமல், லோகேஷ், அனிருத், உதயநிதி உள்ளிட்ட விக்ரம் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருக்கும் 40 வகையான சைவ, அசைவ உணவு வகைகளை கொடுத்து அசத்தி உள்ளனர்.

இந்த விழாவிற்கு சாப்பாடு ஏற்பாட்டை கவனித்தது கோவை சேர்ந்த பிரபல மாதம்பட்டி பாகசால சமையல் குழு. அதுமட்டுமின்றி இந்த  விருந்தை சமைத்தது  இந்த சமையல் நிறுவனத்தின் தலைவரும் இளம் Chef-மான மாதம்பட்டி ரங்கராஜ். இந்த மாதம்பட்டி பாகசால சமையல் குழு கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற கேட்டரிங் நிறுவனம் ஆகும். தனியார் நிகழ்ச்சிகள், திருமணங்கள், மீட்டிங்கள் என அனைத்திற்கும் கோவையை சுற்றியுள்ள பிரபலமானவர்கள், பணக்காரர்கள் தேடி செல்லி இடம் இந்த மாதம்பட்டி சமையல் குழுவையே.

இந்த சமையல் குழுவின் தலைவர் நடிகராகவும் நடித்துள்ளார். ரங்கராஜ், இவர் மெஹந்தி சர்க்கஸ் எனும் திரைப்படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். அது மட்டுமின்றி இவர் நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான “பென்குயின்” படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது கேசினோ என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்