மாதம்பட்டி ரங்கராஜ் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக வெளியான போட்டோ

வெளியிட்டது

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் குடும்ப புகைப்படம் ஒன்று முதல் முறையாக வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கின்றனரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாதம்பட்டி ரங்கராஜ் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக வெளியான போட்டோ 1

சிறுவயதில் இருந்தே கடின உழைப்பால் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவர் வீட்டு விசேஷங்களிலும் இவரது கேட்டரிங் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.


தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இல்லத்திலும் சென்று சமைத்துக் கொடுத்து கலக்கி வருகிறார். பத்தாயிரம் பேருக்கு கூட அசால்டாக சமைத்து கலக்கி வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ் .

தற்போது முதல் முறையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித்  கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்க இருக்கிறார்.  சினிமாவில் நடிக்க விரும்பி வாழ்க்கையை தொடங்கிய அவருக்கு சினிமா பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் சமையல் தொழில் அவரை பிரபலமாக்கியது.


மாதம்பட்டி ரங்கராஜன் தனிப்பட்ட குடும்பங்கள் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. அவரது மனைவி பெயர் ஸ்ருதி என்பது மட்டும் தெரியும். அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதே தற்போது தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. அந்த அழகிய குடும்ப புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்