Categories: சினிமா

10 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு!!கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராகேட்டரி படம் பெற்ற பாராட்டுக்கள்!!!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய்யாக மணிரத்தினத்தால் அறிமுகமானவர் நடிகர் மாதவன். 1990களின் கடைசியிலிருந்து 2010ஆம் ஆண்டுகள் வரை பல வெற்றி படங்களை நடித்துளளார். காமெடி,ஆக்ஷன்,செண்டிமெண்ட்,காதல் என அனைத்து விதமான கத்பாத்திரங்களும் ஏற்று நடித்து வெற்றிகண்ட இவர், சில ஆண்டுகள் காணாமல் போனார். நடுவில் ஹிந்தியில் “3 இடியட்ஸ்” படத்தில் நடித்து இருந்தார். அதுவே ஒரு சில வருடங்களில் அவர் நடித்த வெற்றி படம்.

10 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு!!கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராகேட்டரி படம் பெற்ற பாராட்டுக்கள்!!! 1

பிறகு திடீரென நடிகர் விஜய் சேதுபதியுடன் “விக்ரம் வேதா” படத்தில் பிரமாண்ட காம்பக் கொடுத்தார். ஆனால் பெரிய பெயரை விஜய் சேதுபதி தட்டி சென்றதால், கொஞ்சம் சறுக்கிய இவருக்கு, 2016ஆம் ஆண்டு வெளியான தமிழ், ஹிந்தி படமான “இறுதி சுற்று” படம் பெரிய வெற்றியை கொடுத்தது.

தற்போது தன் சொந்த இயக்கத்தில் “நம்பி ராக்கெட்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இவருடன் அந்த படத்தில் சிம்ரன்,மிஷா கோஷல், சிறப்பு தோற்றத்தில் சூர்யா  என பலரை நடிக்க, மாதவன் தயாரித்துள்ளார். நம்பி நாராயணன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் சிறப்பு காட்சியை நடிகரும்,இயக்குனருமான மாதவன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் காட்சிபடுத்தியுள்ளார். இதனை பார்த்த பலரும் படம் முடிந்த பிறகு எழுந்து நின்று 10 நிமிடங்கள் கை தட்டி உற்சாக பாராட்டுகளை வெளிப்படுத்தினர்.

இந்த விடியோவை இந்தியன் பிலிம் ஃபேர் சங்கம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வெளியிட்டு அவர்களும் தங்களது பாராட்டுகளை பகிர்ந்துள்ளார். படம் முடிந்த பிறகு மாதவன் மேடையேறி “பாராட்டிய, படம் பார்த்த நல்லுள்ளங்களுக்கு நன்றி” என கூறினார்.

மாதவனுடன் நம்பி நாராயணனும் கலந்து கொண்டார். இந்த படம் பல நல்ல விமர்சங்களையும், பாராட்டுகளையும் பெற்று வரும் நிலையில், படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்