Categories: சினிமா

நடிகர் கணேசுக்கு மாதுரி தீட்சித் அவரது ட்ரைலர் வெளியிட்டு பரிசு

வெளியிட்டது
நடிகர் கணேசுக்கு மாதுரி தீட்சித் அவரது ட்ரைலர் வெளியிட்டு பரிசு 1

பாலிவுட்டில் கணேஷ் அறிமுகமாகும் கன்ஸ் ஆஃப் பனாரஸ் என்ற படத்தின் டிரைலரை பாலிவுட் நடிகையான மாதுரி தீட்சித் வெளியிட்டார்.

இது குறித்து கணேஷ் வெங்கட்ராம் கூறுகையில், ‘எனக்குள் மிகப் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்திய நடிகை மாதுரி தீட்சித், என் முதல் இந்தி படத்துடைய டிரைலரை வெளியிட்டது பெரிய பரிசாக எனக்கு அமைந்துள்ளது என்று சந்தோஷப்படுகிறேன்.

இந்த படத்தில் கரண் நாத், நத்தாலியா கவுர், வினோத் கன்னா நடித்துள்ளனர். சேகர் சூரி இயக்கியுள்ளார். வரும் 28ம் தேதி படம் திரைக்கு வருகிறது. தமிழில் நடிகர் யூகி சேது இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன்.

இந்த படத்தில் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டு திரில்லர் கதையாக உள்ளது. மேலும், தெலுங்கில் தாடி என்ற படத்தில் நடிகராகவே நான் நடிக்க, பத்திரிகையாளராக ஸ்ரீகாந்த் நடிக்கிறார்’ என்றார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்