“புகார் அளித்தால் ஆட்களை வைத்து மிரட்டுகிறார் மதுவந்தி”!!”PSBB பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி, 6 லட்சம் வரை பணமோசடி”!! சென்னை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் மதுவந்தி மீது பரபரப்பு புகார்

வெளியிட்டது

பழம்பெரும் நடிகர் வை.ஜி.மாஹேந்திரனின் மகள் மதுவந்தி. இவரை மக்களுக்கு இவர் பேசிய சர்ச்சை கருத்துக்கள் மூலமே ஞாபகம் இருக்கும். சில மாதங்கள் முன்பு தனியார் பேட்டி ஒன்றில் பிராமணர்கள் பற்றி இவர் பேசிய கருத்துக்கள் மிக வைரலானது. அதே போல 2020ஆம் ஆண்டு, இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்தால் கொரோனா வைரஸ் அழிந்து விடும் இவர் பேசியது மிகவும் கேலிக்குரிய விஷயம் ஆனது. குறிப்பாக பல நெட்டிசன்களும் இவரை பல்வேறு வகையில் கலாய்த்தனர்.

இவர் உண்மையில் Calibre Educational Trust’ன் கமிட்டி மெம்பராக உள்ளார். 2009ஆம் ஆண்டு “Women of the year” ஆகா Ritz Fashion Magazineனால் தேர்ந்துடுக்கபட்டார். 2020 ஆம் ஆண்டு பா.ஜ.க கட்சியில் இவர் சேர்ந்தார். 2016ஆம் ஆண்டு வெளியன சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி. தமன்னா நடித்த “தர்மதுரை” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். அதன் பின் சிவலிங்கா போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

"புகார் அளித்தால் ஆட்களை வைத்து மிரட்டுகிறார் மதுவந்தி"!!"PSBB பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி, 6 லட்சம் வரை பணமோசடி"!! சென்னை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் மதுவந்தி மீது பரபரப்பு புகார் 1

2016ஆம் ஆண்டு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பெற்ற 1 கோடி ருபாய் லோன் தொகையில், 1.21 லட்சம் ரூபாய் மீதம் வைத்ததால், பைனான்ஸ் நிறுவனம்  இவரின் வீட்டை தேனாம்பேட்டை போலீஸ்ரின் உதவியுடன் 2021ஆம் ஆண்டு அக்டோபரில் சீல் வைத்தனர்.  இந்த நியூஸ் அப்போது மிகவு பரபரப்பாக பேசப்பட்டது.  இப்பொது அதே போல மற்றொரு வழக்கு இவர் மேல் தொடரப்பட்டு உள்ளது.

சென்னியிலுள்ள PSBB ஸ்கூலில் சீட் வாங்கி தருவதற்கு மதுவந்தி பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை தீ நகரை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்பவர் சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பது, “PSBB பள்ளியில் சீட்டு பெற்று தருவதாக என்னிடம் வந்து இதுவரை 19 லட்சம் பணம் பெற்றிருக்கிறார். ஆனால், இதுவரை பள்ளியில் சீட் வாங்கி கொடுக்கவில்லை” என்று கூறி இருந்தார்.

இதனையடுத்து கிருஷ்ணபிரசாத்தின் புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவருடைய வழக்கறிஞர் கூறியிருந்தது, “கிருஷ்ணபிரசாத் நிர்வகிக்கும் கோவிலுக்கு 2019 முதல் மதுவந்தி வந்து இருக்கிறார். அங்கு கிருஷ்ணாபிரசாத்திடம் PSBB பள்ளியை தான் நிர்வகித்து வருவதாகவும், அங்கு சீட் பெற்றுத் தர தலா ரூ.3 லட்சம் தந்தால் சீட் வாங்கித் தருவதாகவும் கூறி இருக்கிறார். இதனையடுத்து மார்ச் 2022ல் கிருஷ்ணாபிரசாத் கோவிலுக்கு வரும் எட்டு பெற்றோர்களிடம் ரூ.19 லட்சம் பணம் வாங்கி மதுவந்தியிடம் கொடுத்து இருக்கிறார்.நீண்ட நாட்களாக பள்ளியில் சீட் கொடுக்கப்படவில்லை என்பதால் பெற்றோர் கிருஷ்ணபிரசாத் இடம் கேட்டிருக்கின்றனர்.

ஆனால் எந்தவித பதிலும் மதுவந்தி தரப்பில் இருந்து வராததால்,  ஒரு கட்டத்தில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்  13 லட்சத்தை மட்டும் பிரசாந்துக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறார். மீதமுள்ள ஆறு லட்சத்தை கிருஷ்ணபிரசாத் கேட்டபோது அவரை தி நகர் பூங்காவிற்கு வரவழைத்து ஆட்களை வைத்து தாக்கி இருக்கிறார். இது பற்றி புகார் கொடுத்த போதும் பாண்டி பஜார் காவல் நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கிருஷ்ண பிரசாத் தரப்பு வழக்கறிஞர் கூறியிருக்கிறார். அடுத்தடுத்த பணமோசடி வழக்கில் மாட்டிவருகிறார் மதுவந்தி. இதற்கு அவர் எவ்வாறு பதிலளிக்கப்போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்