Categories: சினிமா

திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட மதுமிதா.!

வெளியிட்டது

திருமணம் ஆகி 3 வருடங்களுக்கு பிறந்த மகனின் புகைப்படத்தை முதல் முறையாக தற்போது ஜாங்கிரி மதுமிதா வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் பெண் காமெடி நடிகைகள் மிகக் குறைவு. அதிலும் சிலர் மட்டுமே வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். அதுபோல ஒரு பிரபலம் தான் மதுமிதா. இவரை மதுமிதா என்று சொல்வதை விட ஜாங்கிரி, அட தேனடை என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு கதாபாத்திரத்தோடு ஒன்றிப் போய் நடித்திருந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படத்தின் மூலமாக சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார் மதுமிதா. இதில் சந்தானம் அவரை ஜாங்கிரி என்றும் தேனடை என்றும் கூறுவார். இதன் பின்னர் தான் அவருக்கு ஜாங்கிரி மதுமிதா என்கிற பெயரை வந்தது. இதன் பின்னர் அவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 2 விலும் நடித்திருந்தார்.

திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட மதுமிதா.! 1

பின்னர் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3யில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 3ன் ஒரு முக்கியமான போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பம் முதலே இவருக்கும் மற்ற ஹவுஸ் மேட்ஸ்க்கும் ஏதாவது ஒரு வகையில் சண்டை வந்து கொண்டே இருந்தது. கலாச்சாரம், தமிழ் பெண் என்றெல்லாம் பேசி மற்ற போட்டியாளர்களை அதிர வைத்தார் மதுமிதா. பின்னர் வீட்டில் தன்னை ராகிங் செய்து துன்புறுத்தினார்கள் என்று சொல்லி கையை கிழித்துக்கொண்டு போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார் மதுமிதா. தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கும் மோசஸ் என்பவருக்கும் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமாகி சுமார் மூன்று ஆண்டுகள் இருவரும் குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மே மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது.

அப்போது தனது மகனுக்கு புத்தர் போல உடையணிவித்து போட்டோ சூட் நடத்தியிருந்தார். பின்னர் குழந்தை பிறந்து சில மாதங்களில் சுதந்திர தினம் வந்ததால் மூவர்ண கொடி போல பச்சை வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற உடைகள் அணிந்து தேசியக் கொடியில் இருக்கும் மூவர்ணத்தைப் போல மூன்று வண்ணத்தில் குழந்தைகளுக்கு உடை அணிவித்து அந்த போட்டோ சூட்டை நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சில மாதங்களாக எந்த புகைப்படத்தையும் வெளியிடாமல் இருந்து வந்த அவர் இன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் மதுமிதாவின் மகன் நன்றாக வளர்ந்து விட்டார். அந்த அழகிய புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மதுமிதாவின் மகனா இவர் அதற்குள் நன்றாக வளர்ந்து விட்டாரே என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்