சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஆகிய இரண்டிலும் கலக்கி வரும் மதுரை முத்து, தற்போது தனக்காக உயர் ரக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பயன்படுத்திருக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அசத்தப் போவது யாரு” என்கிற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் மதுரை முத்து. தனது அயராத உழைப்பால் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உயரத்தை அடைந்தார்.
மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வாழ்க்கையைத் தொடங்கி தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 2வில் ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.
சிறியவர்கள் முதலில் பெரியவர்கள் வரை ரசிக்கும் காமெடியனாக இருக்கும் மதுரை முத்து தற்போது தனக்கென சொந்தமாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்கள் பக்கத்தில் பகிர்ந்த அவர், “உங்கள் அன்பு மற்றும் ஆதரவில் எங்கள் இல்லத்திற்கு வந்த புது தோழன்” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது.